• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கோளாறு காரணமாக 14,000 கார்களை திரும்பப் பெற்றது MG மோட்டார்..

கோளாறு காரணமாக 14,000 கார்களை திரும்பப் பெற்றது MG மோட்டார்..

BS6 எம்ஜி ஹெக்டர்

BS6 எம்ஜி ஹெக்டர்

எம்ஜி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது மிட்சைஸ் எஸ்யூவி ஹெக்டரை அறிமுகப்படுத்தியது.

  • Share this:
உமிழ்வு தொடர்பான பிரச்சனை காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா தனது BS6 எம்ஜி ஹெக்டர் பெட்ரோல்- DCT-யின் 14,000 யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது. ஹரியானாவின் மானேசரில் உள்ள சர்வதேச ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி மையம் (iCAT) நடத்திய உற்பத்தி இணக்கத்தன்மை (CoP) சோதனையில் இந்த வாகனங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அவை ரிட்டன் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட்டில் வெளியான தகவலின்படி, சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் ஹலோல் குஜராத்தில் உள்ள எம்ஜியின் உற்பத்தி நிலையத்திலிருந்து வந்தவை.

இந்த எஸ்யூவி, DCT பெட்ரோல் வேரியண்ட்டிற்கான சான்றிதழ் வகை தொடர்பாக நடத்தப்பட்ட காப் CoP சோதனையில் தோல்வியடைந்தது. நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட ஹெக்டர் DCT BS6 வாகனத்தின் மாதிரிகளை சோதிக்கும் போது ஹைட்ரோகார்பன் மற்றும் NOx உமிழ்வில் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த சிக்கல் ஒரு மென்பொருள் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சிக்கலை ஒரு அப்டேட்டுடன் எளிதாக சரிசெய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக அனைத்து யூனிட்டுகளின் பிராசஸ்களையும் மாற்ற தேவையில்லை. எதிர்காலத்தில் விற்பனைக்கான நல்ல தீர்வுகளை அடைய முறையான அனுமதியைப் நிறுவனம் விரைவில் பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாடல்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அதன் டீலர்ஷிப்களுக்கு நிறுவனம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து மாடல்களிலும் இந்த வருட இறுதிக்குள் சிக்கலை சரிசெய்ய எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது மிட்சைஸ் எஸ்யூவி ஹெக்டரை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் ஹெக்டர் வாகனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வேரியண்ட்டையும் சேர்த்து மொத்தம் 60,000 யூனிட்களை விற்றுள்ளது. மேலும் வாகனத்தின் என்ஜின்களைப் பொறுத்தவரை, ஹெக்டருக்கு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியன்ட் வழங்கப்படுகிறது. இது 142 பிஎச்பி மற்றும் 250 என்எம் பீக் டார்க்குடன் அதிகபட்ச சக்தியை உற்பத்தி செய்யும் திறனுடன் வருகிறது.

Also read... ஹேரியர், சஃபாரியில் நியூ வேரியண்ட் - புது மாடல்களை களமிறக்கிய டாட்டா!

கூடுதலாக, எஸ்யூவி 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினையும் பெறுகிறது, இது அதிகபட்சமாக 170 பிபி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு, எம்ஜி தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி க்ளோஸ்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. MG ZS EV அறிமுகத்தை மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் EV பிரிவில் நிறுவனம் தற்போது நுழைந்துள்ளது. இந்தியாவில் இந்த 5 சீட்டர் EV ரூ .21 லட்சம் (ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: