சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி ஜூலை 1, 2022 நிலவரப்படி பிரபல கார் தயாரிப்பாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திடம் சுமார் 1.43 லட்சத்திற்கும் அதிகமான ஓபன் புக்கிங்க்ஸ்கள் (open bookings) உள்ளன. அதாவது மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை புக்கிங் செய்துள்ள சுமார் 1.43 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இன்னும் கார்கள் வழங்கப்படவில்லை.
இந்த எண்ணிக்கையில் அதன் நான்கு மாடல்களான XUV700, XUV300, தார் மற்றும் பொலேரோ ஆகியவை மட்டுமே அடக்கம். மொத்த புக்கிங்ஸ்களில் Mahindra XUV700 காரானது சுமார் 80,000-க்கும் மேற்பட்ட புக்கிங்ஸ்களை கொண்டுள்ள அதே நேரத்தில் 26,000 யூனிட் தார் (Thar) வாகனம் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை. மஹிந்திரா பொலேரோ மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவை முறையே 15,000 மற்றும் 14,000 ஒப்ப புக்கிங்ஸ்களை கொண்டுள்ளன. தற்போது மஹிந்திரா தார் மற்றும் XUV700 ஆகிய வாகனங்களை பெறுவதற்கான காத்திருப்பு காலம் (waiting period) சுமார் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது.
XUV700 மற்றும் தார் ஆகியவை இப்போது சந்தையில் மிகவும் பிரபலமான மஹிந்திரா SUV-க்களாகும். எனவே இரண்டுமே சுமார் 1 வருடத்திற்கும் மேலான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன. புதிய தார் காரானது ரூ.10 லட்சத்திற்கும் குறைவான தொடக்க விலையை கொண்டிருப்பதால், புதிதாக தார் வாங்க நினைப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது. 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read : எலெக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா.?
2022 நிதியாண்டில் 37,844 யூனிட்களும், குறிப்பாக ஏப்ரல்-மே 2022-ல் 6,361 யூனிட் தார் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த சூழலில் வரும் ஜூலை 30 முதல் ஆல்-நியூ Scorpio N-க்கான புக்கிங்ஸ்களை ஓபன் செய்கிறது மஹிந்திரா நிறுவனம். கடந்த மாதம், மஹிந்திரா நிறுவனம் புத்தம் புதிய Scorpio N காரை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது. SUV Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L வேரியன்ட்ஸ்களில் வழங்கப்படுகிறது மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மற்றும் 4×4 வேரியன்ட்களின் விலைகள் வரும் ஜூலை 21 அன்று வெளியிடப்பட உள்ளது.
எனவே வரும் ஜூலை 30 அன்று அனைத்து புதிய Scorpio-N-க்கான புக்கிங்ஸ்களை தொடங்கும் போது ஓபன் புக்கிங்க்ஸ்களின் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மஹிந்திரா நிறுவனம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ம் தேதி தனது எலெக்ட்ரிக்கில் இயங்கும் பயணிகள் வாகனங்களை வெளியிட உள்ளது. இதைத் தொடர்ந்து eXUV400 செப்டம்பர் 2022-ல் வெளியிடப்படும். eXUV400 ஆனது XUV300 காம்பாக்ட் SUVயின் மின்சார மறுதொடக்கமாக இருக்கும் மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும்.
டெலிவரி தாமதத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பல சிப்கள் தேவைப்படும் XUV700-ல் AdrenoX இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ADAS போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை மஹிந்திரா வழங்குகிறது. செமிகண்டக்டர் ஷார்ட்டேஜ் இது போன்ற அம்சங்களுக்கான உற்பத்தி தாமதத்திற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாகவே கார்களை புக் செய்துள்ளவர்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் ஏற்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.