முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / உலக வாகன துறையில் 2022-ல் ஆதிக்கம் செலுத்த போகும் டாப் ட்ரெண்ட்ஸ்கள் இங்கே..

உலக வாகன துறையில் 2022-ல் ஆதிக்கம் செலுத்த போகும் டாப் ட்ரெண்ட்ஸ்கள் இங்கே..

டாப் ட்ரெண்ட்ஸ்

டாப் ட்ரெண்ட்ஸ்

கோவிட் தொற்றுநோய் மற்றும் அதன் அடுத்தடுத்த விளைவுகள் கடந்த 2 ஆண்டுகளில் மொபிலிட்டி இண்டஸ்ட்ரியின் முகத்தை மாற்றியுள்ளன.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹென்றி ஃபோர்டு வாகன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தியதிலிருந்து ஆட்டோமேட்டிவ் இண்டஸ்ட்ரி பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. கார்கள் ஆடம்பர தயாரிப்புகள் என்பதிலிருந்து அவை காலத்தின் தேவையாகிவிட்டன. மேலும் நவீன கால கார்கள், பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை விட அதிக தொழில்நுட்ப டிவைஸ்களாக மாறி வருகின்றன.

நவீன உலகின் பரவலான டிஜிட்டல் மயமாக்கல் வாகன துறையிலும் பெருமளவில் ஊடுருவியுள்ளது. கோவிட் தொற்றுநோய் மற்றும் அதன் அடுத்தடுத்த விளைவுகள் கடந்த 2 ஆண்டுகளில் மொபிலிட்டி இண்டஸ்ட்ரியின் முகத்தை மாற்றியுள்ளன. வரும் 2022-ல் ஆட்டோமேட்டிவ் இண்டஸ்ட்ரியில் பல மாற்றங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆண்டில் உலகளாவிய வாகன தொழிலில் பரவலாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கும் முதல் ஐந்து ட்ரெண்ட்ஸ்களை தற்போது பார்க்கலாம்.

சாலையில் அதிகமான EV-க்கள்..

எரிபொருள் வாகனங்களுக்கு சிறந்த மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த திறன் கொண்டவை என்பதை டெஸ்லா போன்ற EV நிறுவனங்கள் நிரூபித்துள்ளன. எரிபொருள் விலை உயர்வு, பேட்டரி விலைக் குறைப்பு, EV மற்றும் ICE வாகனங்களின் முன்கூட்டிய விலைக்கு (upfront cost) இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல், மாசு உமிழ்வு விதிமுறைகளைக் கடுமையாக்குதல், சுற்று சூழல் பிரச்சனைகள் குறித்த பொதுவான விழிப்புணர்வு போன்ற பிற காரணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. வரும் 2030-க்குள் நாட்டில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை புழக்கத்தில் வைத்திருக்க பல நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே இந்த 2022-ஆம் ஆண்டை விட அதிகமான புதிய எலெக்ட்ரிக் கார்கள் 2023-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டானமஸ் வெஹிகிள்..

2022ஆம் ஆண்டில் ஒருபக்கம் எலெக்ட்ரிக் கார்கள் குறிப்பிடத்தக்க எழுச்சியை காணப்போகும் அதே நேரத்தில் வாகன தொழிற்துறையில் மற்றொரு பெரிய மாற்றம் அட்டானமஸ் வெஹிகிள் செக்மென்ட்டில் இருக்கும். செல்ஃப்-டிரைவிங் டெக்னலாஜி ஆட்டோமொபைல் துறையில் பெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல பாரம்பரிய வாகன உற்பத்தியாளர்கள், மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் செல்ஃப்-டிரைவிங் டெக்னலாஜியில் வேலை செய்கின்றன. எனவே பல autonomous vehicle-கள் அடுத்த ஆண்டில் மார்கெட்டிற்குவரும் என்று எதிர்பார்க்கலாம்.

ALSO READ |  செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்க போகிறீர்களா.? முந்தைய சர்வீஸ் ஹிஸ்ட்ரி & ரிப்பேர் விவரங்களை செக் செய்வது எப்படி.!

பல அம்சங்கள் அடங்கிய கார்கள்..

நவீன கார்கள் பல அம்சங்களுடன் வருகின்றன. புதிய தலைமுறை கார்கள், டிரைவிங் எய்ட் சிஸ்டம்ஸ், பாதுகாப்பு, வசதி போன்ற பல்வேறு பிரிவுகளில் பலவிதமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் வந்துள்ளன. இதனிடையே மசாஜ் சீட்ஸ், ஹீட்டட் சீட்ஸ், காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமிலிருந்து கேமிங், ஏர் ப்யூரிஃபிகேஷன் , செல்ஃப்-டிரைவிங், மோதல் முன்கணிப்பு போன்ற பல அம்சங்கள் தற்போது மிகவும் பிரதானமாகி வருகின்றன. எனவே வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் கார்ககளை மற்ற பிராண்டுகளில் இருந்து வேறுபட்டதாக மாற்றும் முயற்சியில் வரும் ஆண்டுகளில் தங்கள் வாகனங்களில் இன்னும் கூடுதல் அம்சங்களை சேர்க்கலாம்.

நேரடி வாடிக்கையாளர் விற்பனை..

அதிகரித்துள்ள டிஜிட்டல் மயமாக்கல் நுகர்வோர் தங்கள் வீட்டு வாசலில் பொருட்களை டெலிவரி பெறும் போக்குகளை அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை ஆன்லனில் ஆர்டே செய்து வீட்டு வாசலிலேயே டெலிவரி பெற்று வரும் நிலையில், இதே போக்கு வாகனங்கள் வாங்குவதிலும் அதிகம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | புதிய வாகனங்களுக்கான பாரத் சீரிஸ் பதிவு அடையாளம் அறிமுகம் - யார் பயன் பெறலாம்?

ஏனென்றால் பல மொபிலிட்டி நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளருக்கு D2C (direct-to-customer) வணிக மாதிரி மூலம் வழங்க தொடங்கியுள்ளன. எனவே ஆன்லைன் விற்பனை மற்றும் D2C பிசினஸ் மாடல் உள்ளிட்டவை வரும் 2022-ம் ஆண்டில் மேலும் எழுச்சியை காண வாய்ப்புள்ளது.

First published:

Tags: Automobile, Car, Trends