பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் வெளியேற்றத்தால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கருத்துகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், பயணத்திற்கு வாகன ஓட்டிகள் செலவிடும் தொகை மிக அதிகமாக உள்ளது என்ற கவலைக்கு தீர்வு அளிப்பதாகவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அமைந்துள்ளன.
தொடக்கத்தில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பது ஸ்கூட்டர் மாடல்களில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. இதனால், பெரும்பாலான ஆண்கள் அவற்றை விரும்பவில்லை. அதிலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் குறிப்பிட்ட தொலைவுக்கு தான் செல்ல முடியும் என்ற சூழலில், தொலைதூர பயணங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒத்து வராது என்ற கருத்து நிலவியது.
கவலைகளுக்கு குட்-பை சொல்லும் ‘ஓபன் ரோர்’ பைக்
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த பைக் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்றாலும், பராம்பரியமான பைக் உற்பத்தியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சூப்பரான பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, ஆண்களை கவரும் வகையில் நல்ல ஸ்போர்ஸ் லுக் கொண்டதாக இந்த பைக் இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. பயணிக்கலாம் என்ற உத்தரவாதத்துடன் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு
‘ஓபன் ரோர்’ பைக்கின் விலை ரூ.99,999 ஆகும். சுருக்கமாக குறிப்பிட்டால் ரூ.1 லட்சம் என்றே சொல்லலாம். மார்க்கெட்டில் இந்த விலையை விட கூடுதலாகவும், குறைவாகவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பல உள்ளன. ஆனால், இந்த அளவுக்கு மைலேஜ் உத்தரவாதம் மற்றும் ஸ்டைலான லுக் ஆகிய அம்சங்களுடன் பொருத்தமான விலையில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றே மோட்டார் வாகன ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பைக் வாங்குவதற்கு நிறுவனத்தின் இணையதளம் மூலமாக மார்ச் 18ஆம் தேதியில் இருந்து நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
எங்கெல்லாம் கிடைக்கும்
முதல் கட்டமாக நாட்டில் 7 மாநிலங்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. பைக்கின் டெஸ்ட் டிரைவ் இந்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. கஸ்டமர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் முற்றிலுமாக இந்திய தயாரிப்பு ஆகும்.
Also Read : கார் வாங்க காத்திருப்போருக்கு நல்ல செய்தி...
பைக் சிறப்பம்சங்கள்
பைக்கில் 4.4 kWh திறன் கொண்ட லித்தியம் - அயன் பேட்டரியும், 10 kW திறன் கொண்ட மோட்டாரும் உள்ளது. வாகனத்தை ஸ்டார்ட் செய்த 3 நொடிகளில் 0 -40 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் நீங்கள் பயணிக்க முடியும். இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.