இந்தியாவில் வருகிற ஏப்ரல் 2025 முதல் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைக்க 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நிதின் கட்காரி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான அரசாணை வரைவு ஒன்றையும் தயாரித்து வழங்குமாறு தனது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசி என்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கவும் முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் மாசுபாடுகளைக் குறைக்க 2023-ம் ஆண்டு முதல் மூன்று சக்கர வாகனங்கள் மீதான தடையும் 2025-ம் ஆண்டு முதல் 150cc-க்கு குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பது என முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: 125 கோடி மரங்கள்... தினமும் 40 கி.மீ. சாலை கட்டமைப்பு- நிதின் கட்கரி டார்கெட்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.