Home /News /automobile /

100 எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க ஆர்டர்... டாடா மோட்டார்ஸுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நிறுவனம்! 

100 எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க ஆர்டர்... டாடா மோட்டார்ஸுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நிறுவனம்! 

ஒலெக்ட்ரா நிறுவனம்

ஒலெக்ட்ரா நிறுவனம்

Olectra Electric Busses | அஸ்ஸாம் மாநிலத்திற்கான எலெக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் மிகப்பெரிய ஆர்டரை பிரபல எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India
    இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இ-சைக்கிள், எலெக்ட்ரிக் கார் என அனைத்தும் மாற்றம் அடைந்து வரும் நிலையில், மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பல்வேறு மாநிலங்களும் தங்களது பொது போக்குவரத்தை மின்மயமாக்க முயன்று வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் மற்றும் ஒலெக்ட்ரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸையே பின்னுக்குத்தள்ளிவிட்டு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றிணை ஒலெக்ட்ரா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    தற்போது அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகத்திடம் இருந்து 100 எலெக்ட்ரிக் பஸ்களை தயாரிப்பதற்கான ஆர்டரை ஒலெக்ட்ரா நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான ஆர்டரை ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் நிறுவனம் அஸ்ஸாம் போக்குவரத்து கழகத்திடம் இருந்து பெற்றுளது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்துள்ள முதல் ஆர்டரை கைப்பற்றியுள்ள ஒலெக்ட்ரா நிறுவனம் அதனை ஒன்பது மாதங்களுக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Read More : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் AC பேருந்து மும்பையில் அறிமுகம்.!


    இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெலிவரி செய்யப்பட்டதில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் பேருந்துகளை பராமரிக்கும் பொறுப்பையும் தங்களது நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 100 பேருந்துகளையும் தயாரிக்க சுமார் 151 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.வி. பிரதீப் கூறுகையில், “வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இருந்து முதல் ஆர்டரைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒப்பந்தம் மூலமாக எங்களுடைய பேருந்து இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் இயங்க உள்ளது. எங்களுடையது இந்தியச் சாலைகளில் ஐந்து கோடி கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து கார்பன் வெளியேற்றத்தை கணிசமாக குறைத்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்துகளை தயாரிப்பதற்கான 3 பெரிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது. முதன் முறையாக டெல்லி போக்குவரத்து கழகத்திடம் (டிடிசி) 1,500 மின்சார பேருந்துகளை தயாரிப்பதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திடம் (டபிள்யூபிடிசி) 1,180 மின்சார பேருந்துகளையும், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு (பிஎம்டிசி) மின்சார பேருந்துகளையும் தயாரிப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Assam, Electric Buses, TATA

    அடுத்த செய்தி