பழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்!

அரசு வாகனங்கள் என்றாலே அவை மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகனங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.

Web Desk | news18
Updated: August 24, 2019, 10:21 PM IST
பழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 24, 2019, 10:21 PM IST
இந்திய ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அதிரடித் திட்டத்தை நேற்று அறிவித்தார்.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அரசு துறைகள் தங்களுக்காகப் புது வாகனங்கள் வாங்கிக்கொள்ளும் செயல் தடை செய்யப்பட்டிருந்தது. இத்தடையை தற்போது நிதியமைச்சர் நீக்கியுள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளில் சந்திக்காத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்திய ஆட்டோமொபைல் துறை சற்று மீளும் என நம்பிக்கைத் தெரிவிக்கப்படுகிறது. பழைய அரசு வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வாங்கிக்கொள்ள ஒப்புதல் கிடைத்துள்ளது. அரசு வாகனங்கள் என்றாலே அவை மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகனங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.


இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான மாருதி சுசூகியும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதால் அரசின் திட்டம் அந்நிறுவனத்துக்குப் பெரிதும் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாருதி சுசூகி தலைவர் பார்கவா கூறுகையில், “நிதி அமைச்சகத்தின் உத்தரவு எங்களது தொழிற்துறையை பெரிதும் ஊக்குவிக்கும்.

மாருதி சுசூகியிடம் எத்தனை வாகனங்கள் வாங்குகிறார்கள் என்பதைவிட எங்களது துறையில் அரசின் ஒரு அறிவிப்பு எத்தகைய நேர்மறை விளைவைத் தருகிறது என்பதே முக்கியம்” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவில் ஜிம்னி மினி எஸ்யூவி... நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் மாருதி சுசூகி அதிரடி!
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...