ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் விரைவில் ஓலா ஸ்கூட்டரில்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் விரைவில் ஓலா ஸ்கூட்டரில்

ஓலா s1 pro

ஓலா s1 pro

Ola Electric நிறுவனமானது அதன் MoveOS 3-ஐ வரும் அக்டோபர் 22-ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் MoveOS 3.0 சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்டில் கவனம் செலுத்தி வருவதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மிக அவளுடன் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் Ola Electric நிறுவனமானது அதன் MoveOS 3-ஐ வரும் அக்டோபர் 22-ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த OS அப்டேட் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்க்கும் அம்சத்தை கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. நிறுவனம் அதன் சோஷியல் மீடியாவில் ரிலீஸ் செய்திருக்கும் டீஸர் வீடியோவில் விரைவில் வெளியிடப்பட உள்ள MoveOS 3-யானது ஹில் ஹோல்ட் அசிஸ்ட் டெக்னலாஜியை (Hill Hold Assist technology) கொண்டிருக்கும் என்று சுட்டி காட்டியுள்ளது.

ஹில் ஹோல்ட் அசிஸ்ட் என்பது பொதுவாக பிரேக் அப்ளை செய்யாமல் இருக்கும் போது கூட வாகனம் பின்னோக்கி செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள அழுத்தத்தை சிறிது நேரம் தானாகவே தக்க வைத்துக் கொள்ளும். பிறகு ஆக்ஸிலரேட்டரை கொடுக்கும் போது பிரேக்குகள் ரிலீஸ் ஆகும். இது யாருக்கு அதிகம் பயன்படும் எனில் அடிக்கடி அதிக சாய்வான பாதையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு. சாய்வான பாதையில் ஏறும் போது அல்லது இறங்கும் போது முன் பின் வாகனம் இருந்தால் அதனுடன் மோதி விடாமல் தவிர்க்க வாகனத்தை இருக்கும் இடத்திலேயே அப்படியே ஹோல்ட் செய்ய பெரிதும் பயன்படும்.

எதற்காக இந்த அம்சம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வருகிறது என்று நீங்கள் யோசிக்கலாம், ஓலா ஸ்கூட்டர் மேல் நோக்கி செல்லும்போது முன்னும் பின்னும் ஓடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இதனால் பேலன்ஸ் மிஸ்ஸாகிறது. ஏனெனில் த்ரோட்டில் இன்புட்டை ரிஜிஸ்டர் செய்ய சில வினாடிகள் ஆகும். இந்த சமயத்தில் வாகனத்தை ஹோல்டு செய்ய பிரேக் போட்டவுடன் ஸ்கூட்டர் த்ரோட்டிலைத் துண்டித்து விடுவதால், ரைடர் பிரேக்கைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. இந்த சிக்கலை சரி செய்யவே வர உள்ள MoveOS 3-யானது ஹில் ஹோல்ட் அசிஸ்ட்டுடன் வருகிறது. மேலும் MoveOS 3-ஆனது ஓலா எலெக்ட்ரிக்கின் S1 மற்றும் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மேலும் பல புதிய அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

வரவிருக்கும் ஆப்ஷன்களில் ஒன்றாக பார்ட்டி மோட் இருக்கும் என தெரிகிறது, ஏனெனில் EV தயாரிப்பு நிறுவனம் இதை பற்றியும் டீஸரில் குறிப்பிட்டுள்ளது. Ola Electric நிறுவனம் கடந்த சில நாட்களாக MoveOS 3-ன் கீழ் வரவிருக்கும் புதிய ஆப்ஷன்களை டீஸ் செய்து வருகிறது. அத்தகைய ஒரு ட்வீட்டில் "புத்தம் புதிய MoveOS 3 அம்சத்திற்கு தயாராகுங்கள், இது உங்களுக்கு எந்த நேரத்திலும், எங்கிருந்தும் தொடங்க உதவும்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா எலெக்ட்ரிக் ஆக்ஸலரேஷன் சவுண்ட்ஸ் அம்சத்தையும் டீஸ் செய்துள்ளது. இந்த அம்சம் ஸ்கூட்டர் நகரும் போது இன்டர்னல் கம்ப்யூஷன் சவுண்டை இயக்கும்.எங்கள் அமைதியான 8.5kW மோட்டார் பேச உள்ளது என்று இதுபற்றிய ட்விட்டில் கேப்ஷன் கொடுத்திருந்தது ஓலா. வாய்ஸ் அசிஸ்ட்/கன்ட்ரோல், மூட்ஸ், விட்ஜெட்ஸ், ப்ரொஃபைல்ஸ் மற்றும் காலிங் உள்ளிட்ட பல அம்சங்களை ஓலா எலெக்ட்ரிக் உறுதியளித்த நிலையில், இன்னும் பல அம்சங்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. இவற்றில் சில வரவுள்ள MoveOS 3-ல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Ola, Scooters, Tamil News