ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்ஷிப்களில் இல்லாமல் நேரடி ஹோம் டெலிவரி மூலம் விநியோகம்: ஓலாவின் அசத்தல் முடிவு!

OLA Electric Scooter

ஓலா நிறுவனத்தில் இந்த நடவடிக்கை பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இடைநிலை டீலர்ஷிப்களின் தேவையை முற்றிலுமாக நீக்குகிறது.

  • Share this:
இந்தியாவில் ஓலா தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இப்போது வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓலா நிறுவனம் மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனத்தை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வாகனத்தை விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு சென்று தங்களது தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களை நேரடியாகப் பூர்த்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலுடன், ஓலா நிறுவனம் எந்த ஒரு இடைத்தரகரும், டீலர்ஷிப்களும் இல்லாமல் விற்பனையின் முழு செயல்முறையையும் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இடைநிலை டீலர்ஷிப்களின் தேவையை முற்றிலுமாக நீக்குகிறது.

ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய ரூ. 499 செலுத்தி ஓலா டெலிவரிகளை உறுதிப்படுத்தும்போது, வாகனத்தை பெறுவதில் நீங்கள் முதல் நபராக இருப்பீர்கள் என்று நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முன்பதிவுகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கேன்சல் செய்யலாம் என்றும் நிறுவனம் உடனடியாக பணத்தை ரீபண்ட் செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தை முன்பதிவு செய்வதற்கு உங்கள் தொலைபேசி எண் மற்றும் OTP சரிபார்ப்புடன் http: //olaelectric.com என்ற இணையத்தில் உள்நுழைய வேண்டும்.

Also Read:   ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

உள்நுழைந்த பிறகு, நிகர வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டுகள், யுபிஐ, இ-வாலெட்டுகள் அல்லது OLA Money ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் ஓலா ஸ்கூட்டரை ரூ .499 க்கு முன்பதிவு செய்யலாம். நீங்கள் விரும்பினால், ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்கூட்டர்களையும் முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாவது, எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் ஆர்டரை ரத்துசெய்யவோ மாற்றவோ முடியும். அவ்வாறு ரத்து செய்யும் நபர்களுக்கு முன்பதிவு கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படுகிறது.

Also Read:   குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000; ஆட்சிக்கு வந்து 75 நாட்களாகியும் அறிவிக்காதது ஏமாற்றம்: கமல்ஹாசன்

ரத்து செய்யப்பட்ட 7 முதல் 10 வணிக நாட்களுக்குள், உங்கள் அசல் கட்டண முறைக்கு பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், ஓலா ஸ்கூட்டரை வேறொருவரின் பெயரிலும் மாற்றலாம். இதற்கான கோரிக்கை வைக்க, support@olaelectric.com என்ற ஐடியில் ஓலாவை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் தொலைபேசி எண் மற்றும் அதில் வரும் OTP ஆகியவை கொண்டு இணையத்தில் நுழைந்ததும், ஓலா ஸ்கூட்டரை ஒருவர் முன்பதிவு செய்யலாம், பின்னர் நீங்கள் ஒரு லைனில் வைக்கப்படுவீர்கள்.

ஓலா தனது வாகனத்தின் ஷிப்மென்ட்டுகளை அறிவிக்கும்போது நீங்கள் முதல் கொள்முதல் விருப்பத்தைப் பெறுவீர்கள். ஓலா ஸ்கூட்டர் என்பது கிளாஸ்-லீடிங் ஆக்சிலரேஷன், அதிக வரம்பு மற்றும் பல முதல்-வகுப்பு கண்டுபிடிப்புகளுடன் கூடிய கேம் சேஞ்சர் சாதனமாகும். மேலதிக தகவல்கள் விரைவில் இணையதளத்தில் கிடைக்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதுவரை, ஸ்கூட்டர் அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் சவாரி செய்யும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதன் வேகம் 20 கிமீ வேகத்தில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே இந்த வரம்பை அடைய முடியும்.

Also Read:  இந்தியாவில் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஃபோன்கள்!

நடைமுறையில், நிஜ வாழ்க்கை நிலைகளை பொறுத்தவரை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் சாதாரணமாக 130-150 கிலோமீட்டர் தூரத்தை அடைய முடியும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சார்ஜிங் நிலையை பொறுத்தவரை, பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஹைப்பர் சார்ஜிங் நிலையத்தில், அதன் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம். வீட்டில் வழக்கமான பிளக்கைப் பயன்படுத்தி, ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்தரை மணி நேரம் எடுக்கும்.

வாகனம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதும், ​​உரிமையாளர் தங்களது ஆப்பில் அறிவிப்பைப் பெறுவர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஓலாவின் புதிய ஆலையில், முதல் பேட்ச் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் என்றும், இது தற்போது வளர்ச்சியில் உள்ளது எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு ட்வீட்டில், தமிழ்நாட்டில் ஓலா ஆலையின் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்பை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த உற்பத்தி பிரிவில் மட்டும் ரூ. 2,400 கோடி முதலீடு செய்யப்போவதாக நிறுவனம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: