'ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' உற்பத்திக்காக ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் மெகா ரோபாட்டிக்ஸ் தொழிற்சாலை!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். (Image source: Shifting Gears)

ஓலாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறியதாவது, " ரோபாட்டிக்ஸ், மெஷின் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் உலகளவில் சிறந்து விளங்கும் ABB நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் கட்டப்பட்டு வரும் மெகா தொழிற்சாலையில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளை செயல்படுத்த ABB-யுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ola கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மேலும், வாகன ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த "ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை" விரைவில் வெளியிட இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் தற்போது ஓலாவின் மெகா தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த மெகா தொழிற்சாலை தயாராகி வாகன உற்பத்தி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாகன உற்பத்தியாளரின் கூற்றுப்படி, இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம் ஏபிபியின் ஆட்டோமேஷன் தீர்வுகளை தொழிற்சாலையின் முக்கிய உற்பத்தி செயல்முறை பகுதிகளில் பயன்படுத்துகிறது. அதில் பெயிண்ட்ங் மற்றும் வெல்டிங் லைன்கள் அடங்கும். மேலும் ஏபிபி ரோபோக்கள் பேட்டரி மற்றும் மோட்டார் அசெம்பிளி லைன்களில் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ABB-யின் ஐஆர்பி 5500 பெயிண்ட் ரோபோக்கள் மற்றும் ஐஆர்பி 2600 டிரஸ்ஸிங் ரோபோக்கள் பெயிண்ட்ங் மற்றும் வெல்டிங் லைன்களில் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் ஐஆர்பி 6700 ரோபோக்கள் பேட்டரி மற்றும் மோட்டார் அசெம்பிளி லைன்களில் ஒருங்கிணைத்தல் மற்றும் பொருள் கையாளுதலுக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ரோபோ செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் தயாரிப்பு தரத்தை மேம்படுத்த ABB ரோபோக்கள் ஓலாவின் AI- செயல்படுத்தப்பட்ட உற்பத்தி வசதியுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் நிறுவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓலா தனது மெகா-தொழிற்சாலையை இண்டஸ்ட்ரி 4.0 கொள்கைகளில் உருவாக்கி வருகிறது. மேலும் இந்த வசதி அதன் சொந்த AI எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்றும் இது உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்த அனைத்து அமைப்புகளிலும் ஆழமாக ஒருங்கிணைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... ஸ்டன்னிங் லுக்குடன் இந்தியாவில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்டு 'Himalayan': இதன் ஆரம்ப விலை தெரியுமா?

இதுகுறித்து ஓலாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறியதாவது, " ரோபாட்டிக்ஸ், மெஷின் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் உலகளவில் சிறந்து விளங்கும் ABB நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் ஸ்கூட்டர் மெகா தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளுக்கான முக்கிய சப்ளையர் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தியில் கூட்டாளராகவும் ABB நிறுவனம் உள்ளது.

ஏபிபியின் தீர்வுகள் ஓலாவின் சொந்த தனியுரிமை AI எஞ்சின் மற்றும் எங்கள் ஸ்கூட்டர் மெகா தொழிற்சாலையில் பதிக்கப்பட்ட தொழில்நுட்ப அடுக்கில் பிரதிபலிக்கும். உலகளாவிய நிபுணத்துவத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். இது எங்கள் தொழிற்சாலையை சாதனை வேகத்தில் உருவாக்க உதவுகிறது மற்றும் வரவிருக்கும் மாதங்களில் எங்கள் முதல் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்க உதவுகிறது" என்றும் கூறியுள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: