ஓலா நிறுவனம் சார்பில் விரைவில் ஸ்கூட்டர் பிக்-அப் சேவை!

ஆப் மூலம் வாடகைக்கு ஸ்கூட்டர் எடுத்துப் பயணிகள் உபயோகிக்கலாம். OTP பாஸ்வேர்டு மூலம் வாகனத்தை இயக்கு முடியும்

Web Desk | news18
Updated: December 20, 2018, 11:18 AM IST
ஓலா நிறுவனம் சார்பில் விரைவில் ஸ்கூட்டர் பிக்-அப் சேவை!
ஆப் மூலம் வாடகைக்கு ஸ்கூட்டர் எடுத்துப் பயணிகள் உபயோகிக்கலாம். OTP பாஸ்வேர்டு மூலம் வாகனத்தை இயக்கு முடியும்
Web Desk | news18
Updated: December 20, 2018, 11:18 AM IST
கால்டாக்ஸி சேவையைப் போல ஸ்கூட்டர் பிக் அப் சேவையை வழங்க vogo என்னும் இந்திய ஸ்கூட்டர் ஷேரிங் நிறுவனத்துடன் ஓலா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

Vogo என்னும் வாடகை ஸ்கூட்டர் நிறுவனம் தற்போது பெங்களுரூ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துடன் ஓலா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓலா, வோகோ மீது 100 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்கிறது. இதன் மூலம் கூடுதலாக 1 லட்சம் ஸ்கூட்டர்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டமாகக் களம் இறக்கப்படுகிறது.

ஆப் மூலம் வாடகைக்கு ஸ்கூட்டர் எடுத்துப் பயணிகள் உபயோகிக்கலாம். OTP பாஸ்வேர்டு மூலம் வாகனத்தை இயக்கு முடியும் என்றும் வோகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வோகோ ஆப் மட்டுமல்லாது விரைவில் ஓலா ஆப் மூலமும் வாடகை ஸ்கூட்டர்களை எடுத்துக்கொள்ளும் வசதி வெளிவரும்.

இதுகுறித்து ஓலா துணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் கூறுகையில், “இந்திய மக்கள் மத்தியில் ஓலாவின் தாக்கம் அதிகம். மக்களுக்குப் பெரிதும் பயனுள்ள சேவையைச் செய்து வரும் ஓலா தற்போது வோகோ மீது முதலீடு செய்கிறது. இதன் நன்மைகளை மக்களோடு சேர்ந்து நாங்களும் காண மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளோம்” என்றார்.

மேலும் பார்க்க: பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 3 பேர் கைது
First published: December 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...