பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டாலும் கூட பழைய விலைக்கு வருவது என்பது பகல் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் மின்சார வாகன புரட்சி கடந்த 2 ஆண்டுகளில் வேகமெடுத்துள்ளது. எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர் என பல தயாரிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகி உள்ளன.
டிவிஎஸ் மோட்டார்ஸ் சமீபத்தில் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் EV பிரிவில் அதன் பங்கை அதிகரித்தது. ஏதர் 450 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோவை உள்ளடக்கிய வலுவான போட்டியாளர்களுக்கு எதிராக iQube மார்க்கெட்டில் நுழைந்துள்ளது. நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முடிவில் இருந்தால் இந்த மூன்றில் நீங்கள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஏதுவாக இவற்றின் சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்:
Ola S1 Pro ஸ்கூட்டரில் ஹைப்பர் டிரைவ் எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. Ola S1 Pro ஸ்கூட்டரானது 8.5kW (11.3 bhp), 58 Nm பீக் டார்க் மற்றும் 115 kmph என்ற டாப் ஸ்பீடை வெளிப்படுத்துகிறது. S1 Pro-வின் 3.9 kWh பேட்டரி ஒரு ஃபுல் சார்ஜில் 135 கிமீ என்ற ரேஞ்சை வழங்கும் என்று ஓலா கூறுகிறது. Ola S1 Pro ஸ்கூட்டர் பேட்டரியை அதன் போர்ட்டபிள் ஹோம் சார்ஜர் பயன்படுத்தி முழுவதும் சார்ஜ் செய்து முடிக்க சுமார் 6 மணிநேரம் ஆகும்.
TVS நிறுவனத்தின் புதிய iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ் வேரியன்ட் 3.04 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. அதே நேரம் இதன் டாப்-ஸ்பெக் ST வேரியன்ட் 4.56 kWh பேட்டரி யூனிட்டைப் பெறுகிறது. iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ் வேரியன்ட் ஒரு முறை சார்ஜ் செய்தல் சுமார் 100 கிமீ வரையும், டாப்-ஸ்பெக் ஃபுல் சார்ஜில் சுமார்145 கிமீ வரை செல்லும் என்றும் TVS கூறுகிறது. டாப் ஸ்பெக் வேரியன்ட் போர்ட்டபிள் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் போது 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அதன் பேட்டரி திறனில் 80 சதவீதத்தை அடைய முடியும்.
Ather 450 ஸ்கூட்டரானது 6kW PMS மோட்டாருடன் வருகிறது. இது 5.4 kW பவர் மற்றும் 26 Nm பீக் டார்க்கை வழங்கும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 2.9 kWh மோட்டார் ஒரு ஃபுல் சார்ஜில் 116 கிமீ வரை மைலேஜை வழங்கும் மற்றும் மணிக்கு 80 கிமீ வேகத்தைத் தொடும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்கூட்டர் ஆட்டோ கட் மற்றும் சர்ஜஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. 0-80 சதவீதம் சார்ஜிங்கை 3 மணி நேரம் 35 நிமிடங்களில் செய்ய முடியும்.
விலைகள்...
விலையை பொறுத்தவரை, Ols S1 Pro-வின் பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,099 -ல் தொடங்குகிறது. TVS iQube ரூ.98,564 விலையுடன் வருகிறது. இருப்பினும் Ols S1 Pro-வின் டாப்-ஸ்பெக், ரூ. 1.08 லட்சத்தில் கிடைக்கும். TVS iQube ST-ன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வாங்க விரும்புவோர் இதை ரூ.999-க்கு புக்கிங் செய்யலாம். Ather 450-ன் பிளஸ் மற்றும் எக்ஸ் வேரியன்ட்களின் விலை முறையே ரூ.1.18 லட்சம் மற்றும் ரூ.1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Ola, Scooters