Home /News /automobile /

OLA S1 Pro எலெக்ட்ரிக் பைக் வேண்டுமா - ஆன்லைனில் புக் செய்யுங்கள்

OLA S1 Pro எலெக்ட்ரிக் பைக் வேண்டுமா - ஆன்லைனில் புக் செய்யுங்கள்

Ola S1 bike

Ola S1 bike

OLA S1 Pro Electric Scooter | ஓலா எஸ்-1 ப்ரோ ஸ்கூட்டரை பர்சேஸ் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, ஓலா ஆப் மூலமாக இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டர்களுக்கு டீலர்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஓலா எஸ்-1 ப்ரோ ஸ்கூட்டருக்கான விற்பனை நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனைக்கு வந்தபோது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், போதிய அளவுக்கு உற்பத்தி இல்லாமை மற்றும் டெலிவரி ரீதியான பிரச்சினைகள் போன்றவை காரணமாக விற்பனை தடைபட்டது. தற்போது கடந்த கால சிக்கல்களுக்கு இந்த நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. தற்போது புதிதாக பர்சேஸ் ஆர்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஓலா எஸ்-1 ப்ரோ ஸ்கூட்டரை பர்சேஸ் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, ஓலா ஆப் மூலமாக இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டர்களுக்கு டீலர்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான மாடல் தேர்வு, கலர் தேர்வு மற்றும் டெலிவரி லொகேஷன் மற்றும் நிதி ரீதியிலான உதவிகள் என அனைத்துமே ஓலா மொபைல் அப்ளிகேஷனில் உள்ளன.

ஆப் மூலமாக ஓலா ஸ்கூட்டர் வாங்குவது எப்படி

  • ஓலா மொபைல் அப்ளிகேஷன் உள்ளே லாகின் செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்வதற்கான கட்டணமாக ரூ.499 செலுத்தியிருந்தால், உங்களுக்கான பர்சேஸ் விண்டோ மார்ச் 17ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஓப்பனில் இருக்கும். ஒருவேளை கட்டணம் செலுத்தியிருக்காவிட்டாலும் கவலை இல்லை. உங்களுக்கான விண்டோ மார்ச் 18ஆம் தேதி முதல் ஓப்பனில் இருக்கும்.

  • மொபைல் அப்ளிகேஷனில் ஓலா எஸ்1 ப்ரோ என்ற செக்‌ஷனை தேர்வு செய்யவும். நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், அதற்கான விவரங்கள் அங்கு இடம்பெறும்.

  • நீங்கள் ஏற்கனவே பர்சேஸ் செய்திருந்தால் இப்போது டெலிவரி லொகேஷன் கொடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும். ஆனால், நீங்கள் முன்பதிவு மட்டும் செய்திருந்தால், ஸ்கூட்டருக்கான மீதமுள்ள தொகையை செலுத்தவும்.

  • இதற்கு அடுத்து, முழு பிரேக் டவுன் பில் தொகை உங்களுக்கு காட்டும். அதாவது ஸ்கூட்டருக்கான விலை, பதிவுக் கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ், ஹெல்மெட் விலை மற்றும் ஹேண்ட்லிங் சார்ஜஸ் ஆகியவை காண்பிக்கப்படும். மொத்த தொகையில் இருந்து உங்கள் முன்பதிவு கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.

  • ஓலா வழங்கும், தனிநபர் விபத்துக் காப்பீடு, ரோட் சைடு அசிஸ்டென்ஸ் போன்றவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். விரும்பினால் நீங்கள் தனியாகவே இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஹெல்மெட் டேப் உள்ளே சென்று, ஹெல்மைட் சைஸ் தேர்வு செய்து வாங்க முடியும். வேண்டுமானால் 2 ஹெல்மெட்களை வாங்கிக் கொள்ளலாம்.

  • இதற்கு அடுத்ததாக டிஜிட்டல் பேமெண்ட் வாய்ப்புகள் உங்களுக்கு காட்டப்படும். அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கட்டணம் செலுத்தலாம். ஒருவேளை இஎம்ஐ மூலமாக வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் பான் கார்டு, வேலை விவரம், அலுவலக முகவரி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.

  • இப்போது உங்களுக்கான ஸ்கூட்டர் டெலிவரி செய்ய தயார் ஆகிவிடும். ஒருவேளை நீங்கள் சார்ந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உண்டு என்றால், அதையும் பெற்றுக் கொள்ளலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric bike, Ola

அடுத்த செய்தி