ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நவராத்திரி 2022 | Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.10,000 அதிரடி தள்ளுபடி.. சில நாட்களுக்கு மட்டுமே.!

நவராத்திரி 2022 | Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.10,000 அதிரடி தள்ளுபடி.. சில நாட்களுக்கு மட்டுமே.!

ஓலா s1 pro

ஓலா s1 pro

Ola S1 Pro Navaratri Offer | பண்டிகை கால தள்ளுபடியின் ஒரு பகுதியாக ஓலா நிறுவனம் தனது Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இப்போது ரூ.10,000 சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கூடவே பண்டிகை காலம் போட்டியை கொண்டு வருவதால் இந்த தருணத்தை மிக சிறப்பாகப் பயன்படுத்த தங்கள் தயாரிப்புகளில் அதிரடி சலுகைகளை வழங்குகின்றன நிறுவனங்கள்.

அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்து உள்ளது. Ola S1 Pro வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக உள்ளது மற்றும் நன்கு விற்பனையாகும் சிறந்த மாடலாகும். எரிபொருள் விலையேற்றங்களுக்கு மத்தியில் புதிதாக வாகனங்கள் வங்குவோரின் கவனம் எலெக்ட்ரிக் டூ வீலர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. எனவே தற்போது எலெக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டு கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பண்டிகை கால தள்ளுபடியின் ஒரு பகுதியாக ஓலா நிறுவனம் தனது Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இப்போது ரூ.10,000 சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது Ola S1 ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சமாக குறைந்துள்ளது. அறிமுகம் செய்யபட்ட போது Ola S1-ன் விலை ரூ.1.30 லட்சமாக தான் இருந்தது. பின்  இதன் விலையை ரூ.1.40 லட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விழாக்கால சலுகை காரணமாக பிரபலமாக உள்ள Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் அறிமுக விலைக்கே கிடைக்கிறது.

மேலும் இந்த சிறப்பு தள்ளுபடி வரும் அக்டோபர் 5 வரை மட்டுமே இருக்கும் என்றும் அதன் பிறகு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் ரூ.1.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜில் ரூ.1,500 தள்ளுபடியையும் ஓலா எலெக்ட்ரிக் வழங்குகிறது. பண்டிகை சலுகையுடன் கூடுதலாக 8.99 சதவீதத்திலிருந்து தொடங்கும் கடன்கள் மற்றும் வட்டி விகிதங்களில் பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்தை (zero processing fee) வழங்குகிறது ஓலா எலெக்ட்ரிக். ஓலா எலெக்ட்ரிக்கின் என்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Ola S1, 3 kW லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 141 கிமீ மைலேஜை வழங்குகிறது. அதே நேரம் நிறுவனத்தின் டாப் மாடலான Ola S1 Pro 4 kW பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிமீ வரை ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேர்த்தியான வடிவமைப்பிற்காக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் Move OS-ல் இயங்குகிறது, மேலும் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் Move OS 3 அப்டேட்டை வெளியிட வாய்ப்புள்ளது. Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்ஸ்பீட் 115 கிமீ ஆகும். மேலும் இந்த ஸ்கூட்டரில் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹில்-க்ளைம்ப் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பல ரைடிங் மோட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Published by:Selvi M
First published:

Tags: Navaratri, Offer, Ola, Scooters