முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 24 மணி நேரத்திற்குள் ஃபாஸ்ட் டெலிவரி செய்யப்படும் OLA Electric Scooters - பவிஷ் அகர்வால் பெருமிதம்!

24 மணி நேரத்திற்குள் ஃபாஸ்ட் டெலிவரி செய்யப்படும் OLA Electric Scooters - பவிஷ் அகர்வால் பெருமிதம்!

Bhavish Aggarwal

Bhavish Aggarwal

OLA S1pro Electric Scooter | சமீபத்திய பர்ச்சேஸ் விண்டோ ஓப்பனிங்கை தவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் பல நகரங்களில் கம்யூனிட்டி டெஸ்ட் ரைட் கேம்பஸ்களை (community test ride camps) ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எரிபொருள் விலையேற்றம் காரணமாக புதிய டூ வீலர்களை வாங்கும் மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவதை நோக்கி செல்கின்றனர். பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், நாட்டில் ஆங்காங்கே சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வெடிப்பு மற்றும் உயிர்பலி சம்பவங்கள் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றும் சில வாரங்களுக்கு முன்னர் தீ பிடித்து எரிந்தது. டெலிவரி செய்யப்பட்ட பின் செயல்திறனில் சிக்கல், தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் பற்றிய புகார்கள் மட்டுமே எழுந்த நிலையில், பேட்டரி தீ பிடித்த சம்பவம் ஓலாவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த மே 21 அன்று சமீபத்திய பர்ச்சேஸ் விண்டோவை ஓபன் செய்தது.

கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து வாடிக்கையாளர்களுக்காக ஓலா எலெக்ட்ரிக் மூன்றாவது முறையாக பர்ச்சேஸ் விண்டோவை தற்போது திறந்து உள்ளது.

இந்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் Ola S1 Pro ஸ்கூட்டரை வாங்கிய 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கி இருப்பதாக ஓலா குரூப்பின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த விரைவான டெலிவரி நடைமுறைக்காக EV ஸ்டார்ட்அப் டீமிற்கு பாராட்டு தெரிவித்து உள்ள தொழிலதிபர் பவிஷ் அகர்வால், மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் அதே வேளையில், டீலர்ஷிப்களில் பதிவு செய்வதற்கும் சில நாட்கள் ஆகும். ஆனால் எங்களது Ola Electric அதன் விரைவான டெலிவரிகளில் முன்னணியில் இருந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய பர்ச்சேஸ் விண்டோ ஓப்பனிங்கை தவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் பல நகரங்களில் கம்யூனிட்டி டெஸ்ட் ரைட் கேம்பஸ்களை (community test ride camps) ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன் டெஸ்ட் டிரைவ் செய்வதன் மூலம் ரைட் குவாலிட்டியை அனுபவிக்க முடியும்.

Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!

ஓலாவிடமிருந்து இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கான முழு செயல்முறையும் அதன் பிரத்யேக ஆப் மூலம் முழுமையாக ஆன்லைனில் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர் மாடல், கலர் மற்றும் டெலிவரி லொக்கேஷனை இந்த App-ல் சேர்க்கலாம். மேலும் வாங்க விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு App மூலம் பணமும் செலுத்தி கொள்ள முடியும்.

Also Read : Electric Scooter தீப்பிடிப்பது அரிதானது தான்.. எதிர்காலத்திலும் நிகழலாம் - ஓலா எலெக்ட்ரிக் சிஇஓ தகவல்!

இதனிடையே Ola S1 Pro-வின் விலை இப்போது ரூ.10,000 உயர்ந்துள்ளது. இப்போது ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு குறித்து நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15, 2021 அன்று ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Automobile, Ola, Scooters