• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் விற்பனைக்கு வந்த Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - எப்படி புக் செய்வது?

இந்தியாவில் விற்பனைக்கு வந்த Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - எப்படி புக் செய்வது?

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

புக் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர் ஷிப்பிங் ஆவதற்கு முன் எந்த நேரத்திலும் கேன்சல் செய்யலாம்.

  • Share this:
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள காரணத்தால், மக்களின் பார்வை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் பக்கம் திரும்பி இருக்கிறது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமல்ல எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது நெக்சான் எலெக்ட்ரிக் காரின் 1000-த்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் நாட்டில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ (Ola S1 & Ola S1 Pro) இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

எரிபொருள் இன்றி முற்றிலும் பேட்டரி மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கனெக்ட்டிவிட்டி மற்றும் சிறப்பான செயல்பாடுகளை வழங்க பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 15 அன்று லாஞ்ச் செய்யப்பட்ட ஓலாவின் முதல் எலெட்ரிக் ஸ்கூட்டர்கள் , சரியாக 1 மாதம் கழித்து இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மேற்காணும் 2 ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நீங்கள் ஒன்றை வாங்க நினைத்தால், உங்களுக்கு தேவைப்படும் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Ola S1 & Ola S1 Pro விலை:

பேஸ் வேரியன்ட்டாக இருக்கும் Ola S1 ஸ்கூட்டரின் விலை ரூ.99,999-ஆவும், ஹை என்டாக இருக்கும் Ola S1 Pro ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 -ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதிவு கட்டணம், மாநிலங்கள் வழங்க கூடிய மானியங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து உங்கள் ஏரியாவில் ஆன்-ரோட் விலை மாறுபடலாம்.

வாங்குவது எப்படி?

செப்டம்பர் 15 காலை 8 மணி முதல் ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆன்லைனில் புக் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 8-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் வாடிக்கையாளர்களால் purchase portal-ல் லாகின் செய்ய முடியாமல் போனது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், OLA-வின் பர்ச்சேஸ் போர்ட்டலில் லாகின் செய்து ரூ.20,000 அட்வான்ஸாக செலுத்த வேண்டும். மீதி தொகையை நீங்கள் செலக்ட் செய்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்வதற்கு முன் கட்ட வேண்டும். தற்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விநியோகிக்கப்படும் என்று ஓலா அறிவித்திருந்தாலும், சரியான தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி டெலிவரி..

புக் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர் ஷிப்பிங் ஆவதற்கு முன் எந்த நேரத்திலும் கேன்சல் செய்யலாம். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளரின்வீடுகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். புக் செய்த 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு எஸ்டிமேட்டட் டெலிவரி டேட் கொடுக்கப்படும் என்று ஓலா கூறி இருக்கிறது.

Also read... இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் Ultraviolette F77 எப்போது அறிமுகம்? நிறுவனம் வெளியிட்ட தகவல்!

சிறப்பம்சங்கள்:

* Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98kWh பேட்டரி மூலம் இயங்கும். Ola S1 Pro ஸ்கூட்டர் 3.97kWh பேட்டரி மூலம் இயங்கும்.

* Ola S1-ன் டாப் ஸ்பீட் 90kmph, Ola S1 Pro-ன் டாப் ஸ்பீட்115kmph

* ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் Ola S1 121கி.மீ தூரம் வரையிலும், Ola S1 Pro 181கி.மீ தூரம் வரையிலும் செல்லும்.

* இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற பல ரைடிங் மோட்களை கொண்டிருக்கும்.

* எக்ஸ்ட்ரா பர்ஃபாமென்ஸிற்காக Ola S1 Pro-ல் ஹைப்பர் ரைடிங் மோட் கொடுக்கப்பட்டு உள்ளது.

* ஓலா நிறுவனத்தின் MoveOS-ல் இயங்கும் ஸ்கூட்டர்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* இந்த ஸ்கூட்டர்கள் மல்ட்டி மைக்ரோஃபோன்களுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன. ஆன்ட்டி தெஃப்ட் சிஸ்டம், ஜியோ- ஃபென்சிங், வாட்டர் அன்ட் டஸ்ட் ரெசிஸ்டென்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் Ola S1 மற்றும் Ola S1 Pro-வில் கொடுக்கப்பட்டு உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: