முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?

OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?

Ola S1 Electric Scooter

Ola S1 Electric Scooter

OLA S1 Scooter | ஏற்கனவே புனேவில் ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றிய சம்பவம் மனதை விட்டு மறைவதற்குள், சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர் ஒருவர் எதிர்கொண்டுள்ள சம்பவம் பிற வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய சம்பவம் என்பதால் உண்மையில் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிதாக டூ வீலர் வாங்க யோசித்த பலரின் கவனம் எலெக்ட்ரிக் டூ வீலர்கள் மீது திரும்பியது. இதனை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டில் விற்பனை சூடுபிடித்தது.

இந்த சூழலில் மார்க்கெட்டில் களமிறங்கிய ஓலா நிறுவனம் ஸ்டைல் மற்றும் க்ளாசி லுக் கொண்ட தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. ஓலாவின் ஸ்கூட்டர்களை மக்கள் போட்டி போட்டு கொண்டு புக் செய்தனர். புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய துவங்கியது ஓலா. இதற்கு முன் வரை நாட்டிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பிரபலமான ஸ்கூட்டராக இருந்த Ola S1, தற்போது மக்கள் மத்தியில் அதன் பிரபலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

இதற்கு காரணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஓரளவு மட்டுமே செயல்பட்டு வருவது தான். முக்கியமாக ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக எழுந்துள்ள புகார்கள் வாங்கும் எண்ணத்தில் உள்ள புதிய வாடிக்கையாளர்களை யோசிக்க வைத்து வருகின்றன.

ஏற்கனவே புனேவில் ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றிய சம்பவம் மனதை விட்டு மறைவதற்குள், சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர் ஒருவர் எதிர்கொண்டுள்ள சம்பவம் பிற வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய சம்பவம் என்பதால் உண்மையில் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Ola S1 ஸ்கூட்டரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் ஒருவர், தனது ஸ்கூட்டரில் ஏற்பட்ட சாப்ட்வேர் கோளாறு காரணமாக தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் என்று புகார் கூறி தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரித்து உள்ளார். @themangofellow என்ற பெயரில் இயங்கும் அந்த ட்விட்டர் யூஸர் தனது போஸ்ட்டில் கூறி இருப்பதாவது, "நான் கடந்த சில நாட்களாக Ola S1 Pro ஸ்கூட்டரை பயன்படுத்தி வருகிறேன். சாலையின் நடுவில் ஒரு கார் தாறுமாறாக நின்று கொண்டிருந்தது. எனவே அவ்வழியே சென்ற நான் என் ஸ்கூட்டரை சற்று பின்னோக்கி இழுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே மெதுவாக பின்னோக்கி இழுக்க துவங்கினேன்.

Also Read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!

உடனே ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் ரிவர்ஸ் மோட் (Reverse mode) எவ்வித நோட்டிஃபிக்கேஷனும் இன்றி தனாகவே ஆக்டிவேட் ஆனது. இதனை கவனிக்காமல் சற்று வேகமாக பின்னோக்கி இழுத்த போது ஸ்கூட்டர் ரிவர்ஸில் செல்ல துவங்கியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த நான் ரிவர்ஸில் சென்றபடியே ஸ்கூட்டருடன் கீழே விழுந்துவிட்டேன். இந்த விபத்தால் எனக்கும், ஸ்கூட்டருக்கும் அடிபட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த இடம் பரபரப்பான பிரதான சாலை இல்லை என்பதால் பெரிய காயம் ஏதும் இல்லை. பிரதான சாலையில் இது போல் நடந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்து தான் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லை..

ஓலா எலக்ட்ரிக்கின் ரோட் சைட் அஸ்சிஸ்டன்ஸை அழைத்து விவரம் கூறிய போது 2 மணிநேரத்தில் சிக்கல் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 2 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் தொடர்பு கொண்டு விவரத்தை கூறி உள்ளார் ரிவர்ஸ் மோட்-ஆல் விபத்தை சந்தித்தவர். இதை தொடர்ந்து ஸ்கூட்டரை எடுத்து சென்ற ஊழியர்கள் ரிப்பேர் எதுவும் செய்யாமல் 1 வாரம் கழித்து மீண்டும் டெலிவரி செய்துள்ளனர். இதனால் கடுப்பான வாடிக்கையாளர் மீண்டும் பிரச்சனையை கையிலெடுக்க, பிறகு ஸ்கூட்டரை சரி செய்து கொடுத்துள்ளனர். ஆனால் மீண்டும் ஓலா ஸ்கூட்டரை ஒட்ட தனக்கு தைரியம் இல்லை என்று கூறி உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் ட்விட்டரில் கூறி இருக்கிறார் குறிப்பிட்ட நபர்.

First published:

Tags: Automobile, Ola