Home /News /automobile /

ஹோலி ஸ்பெஷல் : புதிய வண்ணங்களில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!

ஹோலி ஸ்பெஷல் : புதிய வண்ணங்களில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

OLA | ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஹோலி ஸ்பெஷலாக மார்ச் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில், தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது எலெக்ட்ரிக் வாகன விற்பனையை இங்கு தீவிரப்படுத்தி வருகின்றன. பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, 'ஓலா எலெக்ட்ரிக்' எனும் பெயரில் மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனத்தின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர் உள்ளது. இதன் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மார்ச் 17ம் தேதியும், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மார்ச் 18ம் தேதியும் விற்பனை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை சிறப்பிக்கும் விதமாக புதிய நிறத்திலான ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது உள்ள 10 வண்ணங்களுடன் ஜெருவா என்ற வெளிர் ஆரஞ்சு நிறத்திலான புதிய ஸ்கூட்டரும் மார்ச் 17 மற்றும் 18ம் தேதிகளில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தைப் பொறுத்தவரை, ஓலா எஸ் 1 ப்ரோ, Eterra App scooterயை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தில் முன்பக்கத்தில் உள்ள ஓலா பேட்ஜ் மற்றும் பின்புறம் உள்ள எஸ்1 ப்ரோ பேட்ஜ் மட்டுமே வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பிற்கு ஓவர் கர்வி வடிவிலான எளிமையான டிசைன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறத்திற்கு மேலும் அழகூட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா எஸ் 1 ஸ்கூட்டரில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்களில் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்த ஹைபர் மோடு சேர்க்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும், 121 கிமீ ரேஞ்ஜையும் ஒரு முழு சார்ஜில் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Also read... வேகனார் முதல் ஸ்விஃப்ட் வரை - மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதிரடி தள்ளுபடிகள்

அதுமட்டுமின்றி ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரில் 7 இன்ச் தொடு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4 ஜி இணைப்பு வசதி, ப்ளூடூத் இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேசன், ஜியோ ஃபென்சிங், பூட் ஓபன் மற்றும் க்ளோஸ் போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓலா எலெக்ட்ரிக் எஸ் 1 மாடல் ஸ்கூட்டர்கள் 99 ஆயிரத்து 999 ரூபாயாகவும், எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ola

அடுத்த செய்தி