• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு ஒத்திவைப்பு - என்ன காரணம்?

Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு ஒத்திவைப்பு - என்ன காரணம்?

Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஸ்கூட்டர் செல்லும் திசை உள்ளிட்ட தகவல்களை ஜி.பி.எஸ் உதவியுடன் முழு தகவல்களும் திரையில் தோன்றும். 4 ஜி இணைப்புகள், யூ டியூப் மற்றும் செல்போன் அழைப்புகள் போன்ற அம்சங்களும் இந்த டச் ஸ்கிரீனில் பார்த்துக் கொள்ளலாம்.

  • Share this:
ஓலா எஸ் 1 எலக்டிரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில் ஓலா எஸ் 1 ஸ்கூட்டருக்கான முன்பதிவை அடுத்த மாததிற்கு ஒத்தி வைத்துள்ளது. கொள்முதலுக்கும், டெலிவரிக்கும் இடையே குறைந்தபட்ச காத்திருப்பு நாட்களை உறுதிபடுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஓலா விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான டெலிவரி உரிய தேதியில் கொடுக்கப்படுவதும் தாமதமாகாது என ஓலா கூறியுள்ளது.

ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் நிறுவனம் 3 வகையிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. முதல் மற்றும் அடிப்படை வேரியண்ட் எலக்டிரிக் ஸ்கூட்டர் 2kW மோட்டாரை கொண்டிருக்கும். இந்த ஸ்கூட்டர் அதிகப்பட்சம் 45 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும். இரண்டாவது மற்றும் நடுத்தர வேரியண்ட் 4kW மோட்டாருடன் வெளியாகிறது. கொண்டிருக்கும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும். கடைசி வேரியண்ட் டாப்-எண்ட் வேரியண்ட் ஆகும். 7kW மோட்டாருடன் வரும் டாப் எண்ட் வேரியண்ட் மணிக்கு 95 கி.மீ வேகத்தில் செல்லும்.

ஓலா ஸ்கூட்டரின் வேகம் 240 கிலோ மீட்டராக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், 150 கிலோ மீட்டர் மின்சார வரம்புடன் இப்போது வெளியாகிறது. இந்த ஸ்கூட்டர்களை சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டரை மணி நேரமாகும். 18 நிமிடங்களில் 50 விழுக்காடு சார்ஜ் செய்துவிடலாம். வீட்டில் இருக்கும் பிளக்கைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தால், முழுமையாக சார்ஜ் ஆக ஐந்தரை மணி நேரம் ஆகும். எலக்டிரிக் ஸ்கூட்டரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இருக்கும்.

Also read... கார் வாங்க திட்டமா? அட்டகாசமான டாப் 5 டீசல் கார்களின் விவரம் இதோ!

ஸ்கூட்டர் செல்லும் திசை உள்ளிட்ட தகவல்களை ஜி.பி.எஸ் உதவியுடன் முழு தகவல்களும் திரையில் தோன்றும். 4 ஜி இணைப்புகள், யூ டியூப் மற்றும் செல்போன் அழைப்புகள் போன்ற அம்சங்களும் இந்த டச் ஸ்கிரீனில் பார்த்துக் கொள்ளலாம். ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து வருகிறது. முதல் யூனிட்டில் ஏற்கனவே பணிகளை தொடங்கியிருக்கும் அந்த நிறுவனம், அடுத்தடுத்த யூனிட்களுக்கான வேலைகளையும் படுவேகமாக செய்து வருகிறது.

இந்தியாவில் எலக்டிரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருப்பதால், அந்த மார்க்கெட்டை முன்கூட்டியே தங்கள் வசப்படுத்துதற்கான திட்டங்களை வகுத்து, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கை செய்து வருகிறது. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஏற்கனவே இருச்சக்கர வாகன துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பஜாஜ், ஹோண்டா, டிவி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் எதிர்கொள்வதற்கான யுக்திகளையும் கருத்தில் கொண்டுள்ளது. அந்தவகையில், டெலிவரி, விலையில் கூடுதல் கவனத்தை ஓலா நிறுவனம் செலுத்தி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: