தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தில் ஒரு சில மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமே இருந்தன. ஆனால் பெரிதாக பிரபலமடையவில்லை. பின்னர் EV புரட்சி வேகத்தை எடுத்தது தற்போது வாகன விற்பனையில் அதன் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என பல முன்னணி நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் ஓலா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதிலும் அறிமுகமான வெறும் 24 மணி நேரத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது. அதிலும் இந்த வாகனங்கள் அந்தந்த கஸ்டமர் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த ஸ்கூட்டர் குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. எனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்களில் ஒன்றை நீங்கள் பெறுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்களை பற்றி விரிவாக பாப்போம். ,
வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் :
தோற்றத்தைப் பொறுத்தவரை, Ola S1 வாகனம் Eterra Appscooter ஐ அடிப்படையாகக் கொண்டது. இது சில காலத்திற்கு முன்பு Ola வாங்கிய டச்சு நிறுவனமாகும். வாகனத்தின் முன்பக்கத்தில் உள்ள ஓலா பேட்ஜ் மற்றும் பின்புறம் உள்ள எஸ்1 ப்ரோ பேட்ஜ் மட்டுமே இந்த வாகனத்தில் உள்ள வித்தியாசம். வாகனத்தின் வடிவமைப்பு மிகவும் எளிமையாக இருக்கும். ஓவர் கர்வி டிசைனுடன் ஸ்கூட்டர் முழுவதும் இயங்கும் சில மடிப்புகள் உள்ளன.
இது LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்களைப் பெறுகிறது. மேலும் இதில் 12 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. முன்புறத்தில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள மோனோஷாக் மற்றும் பின்புறம் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அதுபோல, ஸ்கூட்டர் S1 வாகனம் மொத்தம் 5 வண்ண விருப்பங்களுடன் வருகிறது மற்றும் S1 Pro வாகனம் கூடுதலாக 5 வண்ண விருப்பங்களுடன் வருகிறது.
வாகனத்தின் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் :
இப்போது எலெக்ட்ரிக் என்பது எதிர்காலத்தின் தொழில்நுட்பம் ஆகும். அதற்கேற்ப இவை முழுமையான அம்சங்களுடன் வருகிறது. ரைட் மோடில் தொடங்கி, S1 ஆனது நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடை பெறுகிறது. அதே நேரத்தில் S1 ப்ரோ கூடுதல் ஹைப்பர் மோடில் வருகிறது. அம்சங்களை பொறுத்தவரை, சிலவற்றில் கீலெஸ் ஆபரேஷன் அடங்கும். உங்கள் ஃபோனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஆப்ஸ் மூலம் ஸ்கூட்டர் செயல்படுகிறது. ஸ்கூட்டர் அதன் அருகாமையை உணர்ந்து அதன் அருகே வரும்போது தன்னைத்தானே அன்லாக் செய்துகொள்கிறது.
S1 ஆனது வெவ்வேறு அமைப்புகளுடன் பல டிரைவர்ஸ் ப்ரோபைல்களுக்கும் இடமளிக்கிறது. எதிர்கால OTA புதுப்பிப்புகளில் ஜியோ-ஃபென்சிங் மற்றும் பேரண்ட் கண்ட்ரோல் போன்ற கூடுதல் அம்சங்களையும் சேர்க்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலாவின் நோக்கம் ஸ்கூட்டரின் அன்றாட பயன்பாட்டில் உள்ள உராய்வைக் குறைப்பதாகும். கனெக்டிவிட்டி மற்றும் ஜிபிஎஸ் அம்சங்கள் போன்ற சகாப்தத்திற்குத் தகுந்த அத்தியாவசியங்களைத் தவிர, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பூட் ஓபன் மற்றும் க்ளோஸ் போன்ற அடிப்படை செயல்பாடுகளையும் இயக்க முடியும்.
செயல்திறன் மற்றும் வாகனத்தின் ரைட்:
ஓலா S1 ஸ்கூட்டர் 2.97 kWh பேட்டரியைப் பெறுகிறது. அதே நேரத்தில் S1 ப்ரோ 3.98kWh பேட்டரியைப் பெறுகிறது. பேட்டரியின் உள்ளே உள்ள செல்கள் தவிர, Ola S1 முற்றிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தயாரிப்பு என்று சொல்ல வேண்டும். அதேபோல, S1 ப்ரோ கூடுதல் ஹைப்பர் மோடை பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தை எட்டும், இல்லையெனில் நிலையான எஸ்1 இல் ஸ்போர்ட்ஸ் மோடில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
Also read... இந்தியாவில் அறிமுகமான பூம் கார்பெட் எலெக்ட்ரிக் டூ வீலர் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
இதன் வரம்பு மற்றும் சார்ஜிங் :
2.97kWh பேட்டரியுடன், S1 ப்ரோ 181km வரை செல்லும். அதேபோல S1 ஆனது ஒரு பெரிய பேட்டரியுடன் ஒருமுறை சார்ஜில் 121km தூரம் செல்லக்கூடியது.
விலை மற்றும் அம்சங்கள் :
இப்போது S1 விலை ரூ. 97,703 ஆகவும், S1 ப்ரோ ரூ. 1.27 லட்சமாக உயர்ந்துள்ளது. நீங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து, FAME மானியங்களுடனும் விலைகள் குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.