ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரூ.79,999 விலையில் அறிமுகமாகும் Ola S1 Air ஸ்கூட்டர்... சூப்பரான ஆஃபர் அறிவிப்பு

ரூ.79,999 விலையில் அறிமுகமாகும் Ola S1 Air ஸ்கூட்டர்... சூப்பரான ஆஃபர் அறிவிப்பு

 Ola S1 Air ஸ்கூட்டர்

Ola S1 Air ஸ்கூட்டர்

Ola S1 Air ஸ்கூட்டர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விநியோகம் தொடங்கும். Ola S1 Air அறிமுக விலையாக தீபாவளி தள்ளுபடி உடன் ரூ.79,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில் OLA S1 Air ஸ்கூட்டருக்கான முன்பதிவில் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. Ola S1 Air ஸ்கூட்டர்களை ரூ.999 விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  Ola S1 Air ஸ்கூட்டர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விநியோகம் தொடங்கும். Ola S1 Air ஸ்கூட்டர் அறிமுக விலையாக தீபாவளி தள்ளுபடி உடன் ரூ.79,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 24-ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விலையில் வழங்கப்படும். அதற்குபின் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.84,999 ஆக உயர்த்தப்படும்.

  Ola S1-சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒலா எஸ்1 ரூ.99,000 விலையிலும், டாப் டையர் எஸ்1 ப்ரோ ரூ.129000 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

  Also Read : நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் விரைவில் ஓலா ஸ்கூட்டரில்

  ஓலா எஸ்1 ஏர் 2.5Kwh பேட்டரி திறன் கொண்டது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கீ.மீ வரை இயக்கலாம். மணிக்கு 85 கீ.மீ வேகத்தில் இந்த ஸ்கூட்டர்கள் செல்லும். இந்த ஸ்கூட்டரகள் வெள்ளை, கோரல் கிளாம் ( coral glam ), நியோ மின்ட் (neo mint ), சில்வர் மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளியாக உள்ளது.

  இந்தியாவில் எலக்டிரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருப்பதால், அந்த மார்க்கெட்டை முன்கூட்டியே தங்கள் வசப்படுத்துதற்கான திட்டங்களை வகுத்து, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கை செய்து வருகிறது. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஏற்கனவே இருச்சக்கர வாகன துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பஜாஜ், ஹோண்டா, டிவி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் எதிர்கொள்வதற்கான யுக்திகளையும் கருத்தில் கொண்டுள்ளது. அந்தவகையில், டெலிவரி, விலையில் கூடுதல் கவனத்தை ஓலா நிறுவனம் செலுத்தி வருகிறது.

  Published by:Vijay R
  First published: