Home /News /automobile /

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் - முழு விவரம்!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் - முழு விவரம்!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் கிடைத்தது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
ஓலா நிறுவனம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, மைலேஜ் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகளை சுதந்திர தினமான இன்று S1 என்ற பேஸ் வேரியண்ட், S1 Pro என்ற உயர் ரக வேரியண்ட் என இரு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேரியண்ட்களுமே ரைடிங் மோட்களின் எண்ணிக்கை, ஃபெர்பார்மன்ஸ், மைலேஜ், கலர்கள் என மாறுபட்டிருக்கின்றன. S1 Pro வேரியண்ட் வாய்ஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் என கூடுதல் சிறப்புகளை பெற்றிருக்கிறது. மேலும் S1 Pro-வில் கூடுதல் ஆக்ஸிலரேஷன், அதிக மைலேஜ், அதிக டாப் ஸ்பீடு என பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளிவருகிறது. இரண்டு மாடல்களிலுமே

S1 வேரியண்ட் சிறப்புகள்:

S1 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ ஆகவும் உள்ளது. இதில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 2.98 kWh திறனுள்ள பேட்டரி இதில் வருகிறது. 5 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 121 கிலோவாகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 4.48 மணி நேரங்கள் தேவைப்படும்.

Also Read: தலிபான்களிடம் இன்றே வீழ்கிறதா காபுல்?: எல்லையை மூடியது பாகிஸ்தான் – ஆப்கனில் பதற்றம் அதிகரிப்பு!

எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இந்த வேரியண்டின் விலை ₹ 99,999 ஆகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்


S1 Pro வேரியண்ட் சிறப்புகள்:

S1 Pro மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ ஆகவும் உள்ளது. இதில் நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 3.97 kWh திறனுள்ள பேட்டரி இதில் வருகிறது. 10 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 125 கிலோவாகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 6.30 மணி நேரங்கள் தேவைப்படும்.

Also Read:   ஹேப்பி பர்த்டே வைகை எக்ஸ்பிரஸ் – ஒரு குட்டி பிளாஷ்பேக்!

ரிவர்ஸ் பார்க் அஸிஸ்ட் எனும் சிறப்பு இந்த வேரியண்டில் மட்டும் கிடைக்கிறது. இது தவிர ரிமோட் பூட் லாக்/அன்லாக், ஆன்போர்ட் நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங், மொபைல் போன் கால், மெசேஜ் அலர்ட், ஆண்டி தெஃப்ட் அலாரம் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இந்த வேரியண்டின் விலை ₹ 1,29,999 ஆகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்


இரண்டு வேரியண்ட்களிலுமே ஒரே எலக்ட்ரிக் மோட்டார் தான் இடம்பெற்றிருக்கிறது. 8.5 kW திறன் கொண்ட இந்த மோட்டாரானது அதிகபட்சமாக 58 Nm டார்க் திறனை பெற்றிருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இரண்டு வேரியண்ட்களுமே 75 கிமீ மைலேஜ் கிடைக்கும் திறனை 18 நிமிடங்களில் பெற்றுவிடும். இந்த பைக்கில் ஸ்மார்ட் வெஹிகிள் கண்ட்ரோல் யூனிட் இடம்பெற்றுள்ளது. இதில் ஆக்டா கோர் பிராஸசர், 3 ஜிபி ரேம் மெமரி, 4ஜி கனெக்டிவிட்டி, வைஃபை, புளூடூத் வசதிகள் உள்ளன.

Also Read:   பெற்றோர்களே உஷார்: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

இந்த பைக்குகள் டியூபுலர் ஸ்டீல் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளன. 12 இஞ்ச் அலுமினியம் அலாய் வீல்கள், கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய இருபக்க டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பைக்குகளை 500 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8ம் தேதி முதல் பைக்குகளில் டெலிவரி தொடங்கும். வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் பைக்குகளுக்கான புக்கிங்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் கிடைத்தது. இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஓசூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Electric bike, Ola

அடுத்த செய்தி