ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அள்ளி வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அள்ளி வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

ஓலா

ஓலா

OLA S1 Diwali Offer | ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக பண்டிகைக்கால சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக நடுத்தர மக்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு ஓர் பழக்கம் உண்டு. வருடம் முழுவதும் கடின உழைப்பால் சேமித்து வைத்தப் பணத்தைக் கொண்டு, பண்டிகைக் காலங்களில் செலவு செய்வார்கள். குறிப்பாக வாகனம், நகை மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு பண்டிகை காலங்களில் ஆர்வம் காட்டுவர்.

அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகளும், பெரும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பண்டிகைக்கால சிறப்பு சலுகைகளை வழங்குவார்கள். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்காக அத்தகைய சலுகையை வழங்குகிறது.

எஸ்1 ஸ்கூட்டருக்கு தீபாவளி பண்டிகை வரையிலும் ரூ.10,000 சலுகை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கடந்த வியாழக்கிழமை டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நவராத்திரி காலத்தில் எஸ்1 ஸ்கூட்டர் மிக அதிகப்படியாக விற்பனையாகியிருக்கிறது.

எஸ்1 ஸ்கூட்டருக்கு ரூ.10000 சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளி வரையிலும் அந்தச் சலுகை நீட்டிக்கப்படுகிறது. எங்களது தயாரிப்பான எஸ்1 ஸ்கூட்டருக்கு மிகுந்த வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி தீபாவளி வரையிலும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்1 ஸ்கூட்டர்

முன்னதாக, ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மாடலின் விலை குறைந்த வடிவமாக எஸ்1 ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓலா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மிக அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.

வழக்கமான நாட்களைக் காட்டிலும் நவராத்திரி நாட்களில் எஸ்1 ஸ்கூட்டரின் விற்பனை 10 மடங்கு கூடுதலாக இருந்தது என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இது தான்.!

என்னென்ன வசதிகள் உள்ளன?

ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் மோட்டார் உள்ளது. சிங்கிள் சார்ஜில் இது 141 கி.மீ. தொலைவுக்கு மைலேஜ் தரும். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த வாகனத்தில் பயணிக்கலாம். ஆனால், வேகம் அதிகரிப்பதற்கு ஏற்ப மைலேஜ் குறையும் என்று ஓலா நிறுவனம் குறிப்பிடுகின்றது.

அதாவது, வாடிக்கையாளர்கள் 3 விதமான வேகத்தில் ஓலா ஸ்கூட்டரை இயக்கலாம். நீங்கள் எகோ மோட் என்னும் மிதமான வேகத்தில் செல்லும்போது 128 கி.மீ. மைலேஜ் கிடைக்கும். கொஞ்சம் வேகமாக சென்றால் 101 கி.மீ. மைலேஜ் வரும். அதுவே ஸ்போர்ட் மோட் என்ற நிலையில் அதிவேகமாக செல்லும்பட்சத்தில் 90 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவிக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Diwali sale, Ola, Scooters