பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக அனைத்து நாடுகளும் மின்சார வாகனத்தை பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர். இதனால், மின்சார கார் உற்பத்தி சந்தை அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. கார் உற்பத்தி மற்றும் டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் அதற்கேற்ப தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக, வாடகை கார்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால், அவர்கள் மின்சார வாகனத்தை உபயோகிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், உலகளவில் வாடகை கார் சந்தையில் கோலோச்சி வரும் ஓலா நிறுவனம், மின்சார வாகனத்தை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகளை தொடங்கியது. தற்போது லண்டனில் முதன்முறையாக மின்சாரத்தில் இயக்கக்கூடிய ஓலா டாக்சி காரை அறிமுகப்படுத்தி உள்ளது. மே 13ம் தேதி லண்டனில் சேவையை தொடங்கிய ஓலா எலக்டிரிக் டாக்சி, படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம், " லண்டனில் அதிகாரப்பூர்வமாக ஓலா எலக்டிரிக் கார்கள் உபயோகத்துக்கு வந்துள்ள நிலையில், மற்ற நகரங்கள் மற்றும் நாடுகளுக்கும் இந்த திட்டம் கொண்டு செல்லப்படும்.
எலக்டிரிக் கார் என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஏற்கனவே, வசூலிக்கப்படும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது" எனக் கூறியுள்ளது. ஓலா நிறுவனத்தின் இங்கிலாந்தின் எம்.டி மார்க் ரோசென்டால் பேசும்போது," உலகளவில் முன்னெடுக்கப்படும் பசுமை திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களையும் இணைக்கும் ஓலாவின் இந்த புதிய முயற்சி வெற்றியைக் கொடுக்கும். மின்சார வாகனங்களின் உபயோகம் காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் மிகப்பெரும் பங்களிப்பைக் கொடுக்கும், அதனை ஓலா நிறுவனம் உலகளவில் முன்னெடுப்பது கூடுதல் மகிழ்ச்சி.
AlsoRead: நாளை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் - AirPods 3 வெளிவருமா?
லண்டனில் முதன்முறையாக ஓலா நிறுவனத்தின் எலக்டிரிக் டாக்சியை அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். லண்டனைப்போல் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் விரைவாக ஓலாவின் எலக்டிரிக் கார் சேவை தொடங்கும்" எனத் தெரிவித்தார். ஓட்டுநர்களைப் பொறுத்தவரை 700 -க்கும் மேற்பட்டவர்கள் ஓலா எலக்டிரிக் காரை இயக்கி வருகின்றனர். வரும் காலங்களில் அந்த எண்ணிக்கை உயரும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக எலக்டிரிக் கார் சேவை தொடர்புகளை லண்டனில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக, கார் ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேசி வருகிறது. லண்டன் மேயர் ஆகியோரிடமும் தங்கள் நிறுவனத்தின் முன்னெடுப்பை அங்கீகரிக்கும் வகையில் உதவி கேட்டுள்ளது. நகரம் முழுவதும் உள்ள காற்று மாசுபாட்டை போக்கி சுற்றுச்சூழல் மேம்படுத்துவதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, எலக்டிரிக் கார் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது. எலக்டிரிக் கார் ஓட்டுநர்கள் மற்றும் பார்ட்னர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கமிஷன் வசூலிக்கப்படாது என்ற கூடுதல் சலுகையையும் கொடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Taxi