ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இன்னும் ஆறு மாதங்களுக்குள் 200 மேற்பட்ட டெஸ்ட் ட்ரைவ் சென்டர்கள் – ஓலா நிறுவனம் அறிவிப்பு

இன்னும் ஆறு மாதங்களுக்குள் 200 மேற்பட்ட டெஸ்ட் ட்ரைவ் சென்டர்கள் – ஓலா நிறுவனம் அறிவிப்பு

ஓலா

ஓலா

நாடு முழுவதிலும் 20 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை நிர்வகித்து வரும் ஓலா நிறுவனம், விரைவில் பல்வேறு நகரங்களிலும் 200 மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படலாம் அல்லது அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துரிதமாக வேலைகளைத் தொடங்கி, இரண்டுவிதமான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஓலா நிறுவனம் பல்வேறு வசதிகளை உடைய ஓலா எலக்ட்ரிக் வாடிக்கையாளர் மையங்களை அமைத்தது. அந்த வகையில், மேலும் 200க்கும் மேற்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்ய உதவும் மையங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக உள்ளது.

ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, பவிஷ் அகர்வால் இதைப் பற்றிக் கூறுகையில், ‘ஆன்லைனில் வாங்குவது மற்றும் சோதனை ஓட்டம் ஆகியவை மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, பெரிதும் விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார். ஏற்கனவே, நாடு முழுவதிலும் 20 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை நிர்வகித்து வரும் ஓலா நிறுவனம், விரைவில் பல்வேறு நகரங்களிலும் 200 மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆன்லைனில் வாங்கவும், டெஸ்ட் ரைடு முன்பதிவு செய்து ஓட்டிப் பார்க்கவும், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்து வருகிறது. எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மூலம் ஓலா தயாரிப்புகளை அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வாய்ப்பும் உள்ளது என்று டிவீட் செய்துள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, Ola S1-சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே நாளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் பற்றிய செய்தியை அறிவித்தது.

Also Read : வானில் பறக்க நீங்க தயாரா..! உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்

Ola எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆண்டு, S1 மற்றும் S1 ப்ரோ என்று இரண்டு மாடல் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தி, முன்பதிவுகளையும் தொடங்கியது. S1 விலை ரூ. 97,703 மற்றும் S1 ப்ரோ ரூ. 1.27 லட்சம் என்று தற்போதைய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து, FAME மானியங்களுடனும் விலைகள் குறையலாம்.

அறிமுகமான 24 மணி நேரத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டன. எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஓலா நிறுவனம் இந்தியாவில் முன்னோடியாக இருந்து வருகிறது.

Published by:Janvi
First published:

Tags: Electric bike, Ola