ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஆகஸ்ட் 15-ல் புதிய தயாரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள Ola Electric

ஆகஸ்ட் 15-ல் புதிய தயாரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள Ola Electric

OLA

OLA

OLA Electric | எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டூவீலர்களை களமிறக்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று (வரும் ஆகஸ்ட் 15) தனது அடுத்த மற்றும் புதிய தயாரிப்பு ஒன்றை பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் ஓலா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், ட்விட்டரில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று நிறுவனத்தின் புதிய தயாரிப்பு பற்றி அறிவிக்க உள்ளதை டீஸர் மூலம் வெளிப்படுத்தினர். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை எதுசார்ந்த தயாரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட போகிறது என்று எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தனது முதல் எலெக்ட்ரிக் காரை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ola கடந்த ஆண்டு இதே நாளில் (2021, ஆகஸ்ட் 15) Ola S1-சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. ஒருவருடம் கழித்து இப்போது மீண்டும் இதே நாளில் புதிய தயாரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓலா அறிவித்துள்ளதால் எலெக்ட்ரிக் காரை பற்றிய அறிவிப்பு தான் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

"ஆகஸ்ட் 15 -ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதில் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளோம், எங்களின் பெரிய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி மேலும் பகிர்ந்துகொள்வோம்!! லைவ்ஸ்ட்ரீமை பார்க்க தயாராக இருங்கள். நேரம் மற்றும் லிங்க் விரைவில் ஷேர் செய்யப்படும்" என்று பவிஷ் அகர்வால் ட்விட் செய்து டீசர் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து உள்ளார்.

வரவிருக்கும் தயாரிப்பு பற்றி பவிஷ் அகர்வால் அதிக விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் தொடர்பாக அடிக்கடி சிறிய சிறிய டீசர்களை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் 2022 மாதம் Ola Electric நேர்த்தியான தோற்றமுடைய DRL-க்கள் மற்றும் முன்புறத்தில் Ola லோகோவை சித்தரித்த ஒரு கார் டீசரை வெளியிட்டது.

Also Read : ஸ்கார்பியோ எஸ்யூவி மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - அசத்தும் மஹிந்திரா.! 

4-டோர் செடானாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த டீசர் வீடியோ, ஸ்லோப்பிங் ரூஃப் லைன் கொண்ட எலெக்ட்ரிக் காரின் முன் மற்றும் பின்புறத்தை வெளிப்படுத்தியது. மேலும் ஓலாவின் எலெ க்ட்ரிக் கார் லாங்-ரேஞ்ச் பேட்டரி பேக்கை பெற வாய்ப்புள்ளது. எனினும் வரவிருக்கும் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், பேட்டரி பேக் மற்றும் சார்ஜிங் நேரம் போன்ற விவரக்குறிப்புகள் குறித்த தகவல்களை ஓலா இன்னும் வெளியிடவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் வரும் நாட்களில் வெளியாகலாம்.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்.!

இதனிடையே Ola Electric நிறுவனம் தனது EV கார் தொழிற்சாலைக்காக சுமார் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அதன் தற்போதைய FutureFactory-ஐ விட கிட்டத்தட்ட இரு மடங்கு இடமாகும். தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் Ola S1 மற்றும் Ola S1 Pro ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Independence day, Ola