ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் சமீபத்தில் ட்விட்டரில் புதிய டீசர் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். புதிய S1 Pro-வின் நிழற்படத்தை வெளிப்படுத்த, காடுகளின் பின்னணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளிப்படுத்தும் ஒரு சிறிய டீசர் வீடியோவை பவிஷ் அகர்வால் ட்விட் செய்து உள்ளார்.
இந்த டீசர் தயாரிப்பின் எந்த விவரங்களையும் பெயரையும் வெளியிடவில்லை என்றாலும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 Pro ஸ்கூட்டரின் பச்சை நிற வேரியன்டை அறிமுகப்படுத்தலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய டீசரை ட்விட் செய்துள்ள பவிஷ் அகர்வால், "ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாங்கள் உருவாக்கிய பசுமையான EV-ஐ வெளிப்படுத்துவோம்! ஏதாவது யூகங்கள் இருக்கிறதா?" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த ட்விட்டுடன் கூடவே காடுகளுடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனத்தின் (அநேகமாக S1 ப்ரோ) நிழற்படத்தைக் காட்டும் டீசர் வீடியோவையும் அவர் ஷேர் செய்து உள்ளார். பசுமையான ஸ்கூட்டர் இப்போது பசுமையாக.. இந்தியா, ஆகஸ்ட் 15 அன்று சந்திப்போம் (Greenest Scooter Just Got Greener..India, See You on August 15) என்று அந்த வீடியோ கூறுகிறது.
Ola S1 Pro தற்போது வரை 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது ஆனால் பச்சை நிறத்தில் இல்லை. சோஷியல் மீடியாவில் பவிஷ் அகர்வாலின் சமீபத்திய டீசர் ட்விட் வரும் ஆகஸ்ட் 15 முதல் Ola S1 Pro பச்சை நிறத்தில் கிடைக்கும் என்பதை சுட்டி காட்டுவதாக கூறபடுகிறது.
On 15th August, we’ll be revealing the greenest EV we’ve made! Any guesses? 🇮🇳 😉 pic.twitter.com/aMFxToOSTo
— Bhavish Aggarwal (@bhash) August 7, 2022
Ola Electric நிறுவனம் தற்போது இந்தியாவில் Ola S1 மற்றும் Ola S1 Pro ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. Ola S1 ஸ்கூட்டரானது 2.98kWh பேட்டரியை கொண்டுள்ளது , Ola S1 Pro ஸ்கூட்டரானது 3.97 kWh பேட்டரியைப் பெறுகிறது. இதில் ஓலா எலெக்ட்ரிக் S1 Pro கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1.29 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் ஸ்கூட்டரின் விலையை ரூ.1.40 லட்சமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உயர்த்தியது. Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 185 கிமீ தூரம் வரை ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்சுடன் வருகிறது.
Also Read : ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.!
ஓலா ஸ்கூட்டர் புதிய ECO மோட் தவிர நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் போன்ற பிற டிரைவிங் மோட்களுடன் வருகிறது. ஹில் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற மற்ற அம்சங்களோடு நேவிகேஷன் உட்பட தேவையான அனைத்து தகவல்களுடன் 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதற்கிடையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் EV கார் சந்தையில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓலா நிறுவனம் அதன் EV நான்கு சக்கர வாகன தொழிற்சாலைக்காக 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இது S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் அதன் தற்போதைய FutureFactory கிட்டத்தட்ட 2 மடங்காகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Independence day, Ola