இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

• Share this:
இந்தியாவில் ஓலா தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இப்போது வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனத்தை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வாகனத்தை விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியது முதல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த விவரங்கள் பின்வருமாறு.,

1) வேரியண்ட் :

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து ஓலா நிறுவனம் மூன்று வகைகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. முதல் வேரியண்ட் 2kW மோட்டார் கொண்டிருக்கும், இந்த வேரியண்டின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 45 கிமீ ஆகும். இரண்டாவது வேரியண்ட் 4kW மோட்டார் கொண்டிருக்கும், இது 70 கிமீ வேகத்தில் செல்லும். கடைசி மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட் 7kW மோட்டருடன் 95 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read : மின்சார வாகனம் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்

2.வரம்பு :

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் சாதாரணமாக 130-150 கிலோமீட்டர் தூரத்தை அடைய முடியும். ஓலா ஸ்கூட்டரின் உச்சகட்ட வரம்பு 240 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இது ஒரு எண்ணாக மட்டும் இருக்காது. உறுதியாக குறிப்பிட்ட வரம்பில் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

3) சார்ஜ் நேரம் :

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சார்ஜிங் நிலையை பொறுத்தவரை, பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஹைப்பர் சார்ஜிங் நிலையத்தில், அதன் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம். வீட்டில் வழக்கமான பிளக்கைப் பயன்படுத்தி, ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்தரை மணி நேரம் எடுக்கும். முழுமையாக சார்ஜ் ஆன பின்னர் உரிமையாளர் போனில் இருக்கும் ஆப்பில் ஒரு அறிவிப்பைப் பெறுவார்.

Also Read : இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த கார்களின் பட்டியல்!

4) மற்ற அம்சங்கள் :

ஓலா ஸ்கூட்டர் 7 அங்குல தொடுதிரை டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஜிபிஎஸ் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இந்த திரையில் தோன்றும். கூடுதலாக, 4ஜி இணைப்பு, யூடியூப், காலிங் போன்ற அம்சங்களை ஆதரிக்கும். மேலும், ஸ்கூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை கண்டறிந்து உரிமையாளர் மற்றும் சேவை மையத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பும். மேலும் பைண்ட் மை ஸ்கூட்டர் என்ற அம்சத்துடன் வருகிறது.

5) வண்ணங்கள் :

வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 வண்ண விருப்பங்களும் வரும் என ஓலா ஏற்கனவே உறுதி செய்துள்ளது, இதில் 8 வண்ணங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் மீதியுள்ள இரண்டு வண்ணங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை இதுவரை அளிக்கவில்லை.

6. விலை :

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வரம்பு மாநில வாரியான EV பாலிசி மற்றும் FAME 2 பாலிசி மூலம் விலக்கு இல்லாமல் ரூ .1 லட்சம் முதல் ரூ 1.2 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. பாலிசிகள் இணைந்து ஒருவர் 35,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். முன்பதிவிற்கு செலுத்தும் ரூ .499 முழுமையாக திரும்பப்பெறக்கூடியது. வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்திய பிறகு ஓலா ஸ்கூட்டர் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: