• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஓலா EV டெஸ்ட் ரைடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

ஓலா EV டெஸ்ட் ரைடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

ஓலா

ஓலா

அகமாதாபாத்தில், ஹிமாலயா மாலில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டெஸ்ட் ரைடை ஏற்பாடு செய்துள்ளது.

  • Share this:
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முன்பே அறிவித்தது போல, தனது S1 மற்றும் S2 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ரைடு தொடங்கியுள்ளது. ஆகஸ்டு மாதம் அறிமுகமான ஸ்கூட்டர்களுக்கான டெஸ்ட் ரைடுக்காக ஆவலாகக் காத்திருந்தவர் இனி டெஸ்ட் ரைடு செய்யலாம். ஆனால், அதிலே சில வரையறைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆன்லைனில் அட்வான்ஸ்டு புக்கிங் செய்தவர்களுக்கு நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடு தொடங்கும் என்று சில நாட்களுக்கு முன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. இந்தியா முழுவதும் டெஸ்ட் ரைடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முன்பதிவு செய்த அணைத்த நகரங்களிலும் டெஸ்ட் ரைடு நடத்தப்படவில்லை என்று ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

“நவம்பர் 10 தொடங்கி, அடுத்த சில வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் டெஸ்ட் ரைடுகள் தொடங்கப்படும். உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் இருக்கும் ஓலா டெஸ்ட் ரைடு கேம்ப்பை கண்டறிந்து. உங்களுக்கான ஸ்லாட்டுகளை பதிவு செயுங்க்ச்ல்” என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. அது மட்டுமின்றி, S1 மற்றும் S2 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான இறுதி பேமெண்ட் நவம்பர் 10 முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இதைப்பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டெஸ்ட் ரைடு என்று அறிவித்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போது நான்கு பெருநகரங்களில் மட்டுமே டெஸ்ட் ரைடுகளை வழங்கியுள்ளது. அவை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் பெங்களூரு. இந்த டெஸ்ட் ரைடு, ஏற்கனவே S1 மற்றும் S2 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே. முன்பதிவு செய்யாதாவர்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய முடியாது.

டெல்லியில், குருக்ராமில் உள்ள சைபர் சிட்டியில், ஃபாரம் என்ற இடத்தில் ஓலா எலக்ட்ரிக் டெஸ்ட் ரைடுகளை ஏற்பாடு செய்துள்ளது. கொல்கத்தாவில், டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர் சவுத் சிட்டி மாலுக்கு செல்ல வேண்டும்.

Also read... பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பதிலாக எந்த பைக்குகள் வாங்கலாம்!

அகமாதாபாத்தில், ஹிமாலயா மாலில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டெஸ்ட் ரைடை ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூருவில் டெஸ்ட் ரைடு செய்யப்படும் இடம், பிரஸ்டீஜ் கியூப் லாஸ்கர் ஆகும். டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர், ஓலா எலக்ட்ரிக் முன்பதிவு ஐடி, ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமின்றி, ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ரெஸ்ட் ரைடு தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் 16 முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாட்களுக்கு S1 மற்றும் S2 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்த ஸ்கூட்டர்களின் முன்பதிவு வழியாக மட்டுமே ரூ.1,100 கோடி திரட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. S1 மாடலின் விலை ரூ. 1 லட்சம் மற்றும் S2 ப்ரோ வின் விலை ரூ. 1.30 லட்சம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: