இந்தாண்டு அறிமுகமாகும் ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் - ஒன் டைம் சார்ஜில் இத்தனை கிலோ மீட்டர் பயணிக்கலாமா?

இந்தாண்டு அறிமுகமாகும் ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் - ஒன் டைம் சார்ஜில் இத்தனை கிலோ மீட்டர் பயணிக்கலாமா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். (Image source: Shifting Gears)

புத்தாண்டில் பிப்ரவரி மாதத்தில் எலக்டிரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்குள் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய இருசக்கர வாகன சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் எலக்டிரிக் ஸ்கூட்டரை களமிறங்க திட்டமிட்டுள்ள ஓலா, ஒன்டைம் சார்ஜில் சுமார் 240 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் வரையில் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பியுள்ளது. இதனை கருத்தில்கொண்ட ஓலா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் எலக்டிரிக் ஸ்கூட்டரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய, மாநில அரசுகளுடன் நடத்தியுள்ள நிறுவனம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2400 கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய முதலீட்டை இந்தியாவில் செய்ய உள்ளது. 

சைமென்ஸ் (Siemens ) நிறுவனத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள ஓலா, விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த எடெர்கோ (ETREGO) எனும் நிறுவனத்தை கடந்த ஆண்டு கைப்பற்றிய ஓலா, அந்த நிறுவனத்தின் மாடலைப்போல் தனது வாகனங்களையும் வடிவமைக்க முடிவு செய்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் யூனிட் வாகனங்களை தயாரிக்கவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை (Spy) புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. அவற்றின் பல அம்சங்கள் எடெர்கோ ஸ்கூட்டரைப்போலவே இருக்கின்றன. ஓலா ஸ்கூட்டரில் டெலஸ்கோப் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.  நேர்த்தியான பாடிவொர்கை கொண்டுள்ள ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர், அளவில் சிறியதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்களை பார்க்கும்போது, ஸ்டைலிங் அடிப்படையில் சர்வதேச தரத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also read... 2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் FTR 1200 பைக் மாடல் அப்டேட் வெர்சன்!

இருப்பினும், இந்திய வாகன சந்தைக்கு ஏற்ப புதிய வடிவமைப்புடன் ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எர்டர்கோ ஆப் ஸ்கூட்டரைப் போலவே நீக்கக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி அம்சம் கொடுக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களின் பொருளாதார திறனுக்கு ஏற்ற அளவிலான பேட்டரி மாடல்களை தேர்தெடுத்துக்கொள்ள முடியும். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனும், ஒருமுறை சார்ஜில் 240 கிலோ மீட்டர் தொலைவும் வாடிக்கையாளர்கள் பயணிக்கலாம். 

புத்தாண்டில் பிப்ரவரி மாதத்தில் எலக்டிரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்குள் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், திட்டமிட்டப்படி எலக்டிரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படாத முடியாத நிலை ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பகுதியில் அறிமுக விழாவை நடத்த ஓலா முனைப்பு காட்டி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இருசக்கர எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா களமிறங்கும்பட்சத்தில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் Ather 450X, பஜாஜ் Chetak மற்றும் TVS iQube ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: