• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியது... வெறும் ₹499 தான்...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியது... வெறும் ₹499 தான்...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும்... அந்த ஸ்கூட்டருக்கு எதிர்பார்ப்பு ஏன்?

  • Share this:
    எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்று ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். ஜெர்மன் டிசைன் விருது உள்பட சர்வதேச அளவில் பல விருதுகளை ஓலாவின் இந்த ஸ்கூட்டர் வென்றுள்ளது. முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் பூஜ்யத்தில் இருந்து 50 விழுக்காடு சார்ஜ் ஆவதற்கு வெறும் 18 நிமிடங்களே பிடிக்கும். அதன் மூலம் 75 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது.

    ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முதல் அலகு தயாராகிவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதுதான் அதன் இலக்கு. இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் தனது இணையதளப் பக்கத்தில் முன்பதிவை தொடங்கிவிட்டது ஓலா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர் போக்சோவில் கைது...         

    நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா?

    வெறும் 499 ரூபாய் செலுத்தினால் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும். இந்த 499 ரூபாய் கூட திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: