ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஓலா E ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - ரூ.499 செலுத்தினாலே போதும்!

ஓலா E ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - ரூ.499 செலுத்தினாலே போதும்!

ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்

ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்பதிவில் ரூ.499 -ஐ செலுத்தி வாடிக்கையாளர் ஓலா கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இ ஸ்கூட்டருக்கான முன்பதிவை தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், 499 ரூபாய் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

டாக்ஸி வாகனங்களை இயக்கி வரும் ஓலா நிறுவனம் விரைவில் விரைவில் எலக்டிரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அந்த நிறுவனத்தின் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 2400 கோடி ரூபாய் முதலீட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையாகவும் இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், விரைவில் விற்பனைக்கு வர உள்ள ஓலா இ ஸ்கூட்டரின் முன்பதிவை ஓலா நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்பதிவில் ரூ.499 -ஐ செலுத்தி வாடிக்கையாளர் ஓலா கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். Etergo ஆப் ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்து ஓலா ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓலா ஸ்கூட்டர் டிசைன்கள் ஜெர்மன் டிசைன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளது. 11544Wh பேட்டரி பவரைக் கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

ஒலா ஸ்கூட்டர்

50 விழுக்காடு சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் எனவும், முழுமையாக சார்ஜ் செய்தால் 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி, இரண்டு ஹெல்மெட்டுகளை வைத்துக்கொள்ளும் வகையில் பூட்ஸ்பேஸ் அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்கூட்டருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் நிறுவனம் தரப்பில் இருந்து எந்தவித அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. அண்மையில், ஓலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவீஷ் அகர்வால் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், எந்தெந்த கலர்களில் ஓலா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் என ஆலோசனை கேட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருப்பு நிறத்தில் ஏற்கனவே ஸ்கூட்டர் தாயரிக்கும் திட்டம் இருப்பதாகவும், கவர்ச்சிகரமான மற்றும் புதிய நிறங்களை பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார். ஓசூரில் அமையும் மிகப்பெரிய பிளாண்டில் நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான கட்டமைப்புகளை செய்து வருவதாகவும் பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.

ஓலா ஸ்கூட்டர்

இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க ஓலா திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு பகுதி தொழிற்சாலையின் பணிகள் நிறைவடைந்தவுடன் பகுதியளவு உற்பத்தி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Automobile, Bike, Ola, Ola Cabs, Online