• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக ஹைப்பர் சார்ஜர் - Ola நிறுவனம் அறிமுகம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக ஹைப்பர் சார்ஜர் - Ola நிறுவனம் அறிமுகம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக ஹைப்பர் சார்ஜர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக ஹைப்பர் சார்ஜர்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புக்கிங் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையை தாண்டியதை அடுத்து உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.

  • Share this:
நாட்டில் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்களிடையே அறிமுகப்படுத்தி, கொண்டு சேர்க்கும் தீவிர முயற்சிகளில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கி இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தி இருக்கும் Ola Electric நிறுவனத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

Ola S1 மற்றும் Ola S1 Pro ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதோடு, இந்தியாவில் ஹைப்பர்சார்ஜர் நிலையங்களையும் நிறுவும் என்று ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன் நிறுவனம் அறிவித்திருந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தை தொடர்ந்து, தனது நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெகு விரைவாக சார்ஜ் செய்ய உதவும் வகையிலான ஹைப்பர் சார்ஜிங் சென்டர்களை அமைக்கும் பணியில் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டுவதாக கூறப்பட்டு வந்தது.ஹைப்பர் சார்ஜிங் சென்டர்கள் மூலம் ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள், தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை குறுகிய நேரத்திற்குள் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புக்கிங் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையை தாண்டியதை அடுத்து உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு கிடைப்பதற்கு முன்பே அவர்களின் வசதிக்காக தனது முதல் ஹைப்பர்சார்ஜ் நெட்ஒர்க் சென்டரை திறந்து இருக்கிறது. ஓலா ​​நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், நிறுவனத்தின் முதல் ஹைப்பர் சார்ஜர் ஸ்டேஷனின் ஃபோட்டோக்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்.



இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நிறுவனத்தின் முதல் ஹைப்பர் சார்ஜரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார். தவிர அந்த ஃபோட்டோக்களில் ஒரு ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹாப்பர் சார்ஜ் செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. அது பவிஷின் ஸ்கூட்டராகும். காலை ட்ரிப்பிற்கு பிறகு தனது Ola S1 ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதாக கூறி இருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ள ஓலா எலெக்ட்ரிக்கின் ஹைபார்சார்ஜர்கள் வெறும் 18 நிமிடங்களில் 0 - 50% வரை இ -ஸ்கூட்டர் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் திறன் கொண்டவை ஆகும்.

Also read... ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 120வது ஆண்டு விழா கொண்டாட்டம் - கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்டுகள் அறிமுகம்!

நாட்டில் எண்ணற்ற இடங்களில் அமைக்கப்பட இருக்கும் ஓலா ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்கள், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் யூஸர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பெருநகரங்களை சேர்ந்த வாடிகையாளர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்க, அதிக சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ஓலா திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் 10 முதல் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓலாவின் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: