ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பண்டிகை காலத்திற்கு மத்தியில் அக்டோபர் மாதம் 20,000 யூனிட் EV-க்களை விற்றுள்ள ஓலா எலெக்ட்ரிக்..!

பண்டிகை காலத்திற்கு மத்தியில் அக்டோபர் மாதம் 20,000 யூனிட் EV-க்களை விற்றுள்ள ஓலா எலெக்ட்ரிக்..!

ஓலா எலெக்ட்ரிக்

ஓலா எலெக்ட்ரிக்

Ola Electric | கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான மொத்த எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனையை விட, அக்டோபர் மாதம் 42% அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனை கடந்த மாதம் (அக்டோபர் 2022 ) சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான சிறந்த எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்டுகள் தங்கள் சிறந்த மாதாந்திர விற்பனையை கொண்டுள்ளன. சமீபத்திய எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனை தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் சுமார் 74,786 எலெக்ட்ரிக் டூ வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான மொத்த எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனையை விட, அக்டோபர் மாதம் 42% அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபரில் பதிவான விற்பனையை விட இந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு விற்பனை அதிகரிப்பு பதிவாகி இருக்கிறது. நாட்டின் எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்டுகளில் அக்டோபரில் அதிக விற்பனையை பதிவு செய்ததில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 20,000 S1 மற்றும் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக்கின் நிறுவனர் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டில், " அக்டோபரில் 20,000 ஓலா எலெக்ட்ரிக் யூனிட்கள் விற்கப்பட்டன. இது இந்தியாவில் ஒரு EV நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத அளவிலான விற்பனை.! ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மாதம் 60% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஓலா கம்யூனிட்டி முன்னெப்போதையும் விட இப்போது பெரியதாக உள்ளது மற்றும் மிஷன் எலெக்ட்ரிக் 2025 பார்வையில் உள்ளது" என்று பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.

இதனிடையே அதிக விற்பனை வளர்ச்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், வலுவான விற்பனையை பதிவு செய்ததில் பண்டிகை காலம் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நவராத்திரியின் போது அதன் தினசரி ஓட்ட விகிதத்தை (daily run rate) விட 4 மடங்கு வளர்ச்சியையும், விஜயதசமியில் 10 மடங்கு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒரு நாளைக்கு சராசரியாக 1,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. 60% மாதாந்திர வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் எட்டியுள்ள அதே நேரம் நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் டூ வீலர் தொழில் கிட்டத்தட்ட 30% வளர்ந்துள்ளது. Ola S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்களை தவிர நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போர்ட்ஃபோலியோவை S1 Air என்ற புதிய மாடலை சேர்த்துள்ளதன் மூலம் விரிவுபடுத்தி உள்ளது. Ola S1 Air ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆகும். இந்தியா முழுவதும் ஏற்கனவே ஓலாவின் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 சென்டர்களை வெவ்வேறு வடிவங்களில் திறக்க ஓலா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Ola, Scooters