Home /News /automobile /

நாட்டிலேயே 2வது பெரிய எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனை நிறுவனமாக மாறிய OLA Electric.!

நாட்டிலேயே 2வது பெரிய எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனை நிறுவனமாக மாறிய OLA Electric.!

OLA Electric

OLA Electric

Ola Electric | ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மார்ச் 2022-ல் EV விற்பனையில் மிக விரைவான வளர்ச்சியை கண்டுள்ளதை FADA வெளிப்படுத்தி உள்ளது. FADA (பெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்) ஷேர் செய்துள்ள தகவலின்படி. கடந்த மார்ச் 2022-ல் EV விற்பனையில் நல்ல உயர்வை Ola Electric நிறுவனம் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளது.

மிக தாமதமான டெலிவரி, பரபரப்பான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது, தானாகவே ரிவர்ஸ் மோட் ஆக்டிவேட்டாவது, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரில் சிக்கல்கள் என பல புகார்கள் மற்றும் குறைபாடுகள் ஓலா எலெக்ட்ரிக் மீது எழுந்துள்ளன. இத்தனை சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து விற்கும் இரண்டாவது நிறுவனம் என்ற நிலைக்கு ஓலா எலக்ட்ரிக் வந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மார்ச் 2022-ல் EV விற்பனையில் மிக விரைவான வளர்ச்சியை கண்டுள்ளதை FADA வெளிப்படுத்தி உள்ளது. FADA (பெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்) ஷேர் செய்துள்ள தகவலின்படி. கடந்த மார்ச் 2022-ல் EV விற்பனையில் நல்ல உயர்வை Ola Electric நிறுவனம் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 9,127 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது.



இது பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டதை விட 234 சதவீதம் அதிகமாகும். பிப்ரவரி மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் சுமார் 3,907 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டதால், Year-over-year விற்பனை புள்ளிவிவரம் பொருந்தாது. இதன் பொருள் என்னவென்றால் ஓலா அதன் நேரடி போட்டியாளரான Ather Energy நிறுவனத்தை விட அதிக மார்ஜினில் விற்றுள்ளது.

Also Read : புதிய வண்ணங்களில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!

மொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதம் 7,360 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்த ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 13,023 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்து உள்ளது.

Also Read : OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?

ஹீரோ எலக்ட்ரிக்கிற்கு அடுத்து 9,127 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலெக்ட்ரிக் இரண்டாமிடத்திலும், மார்ச் 2022-ல் 8,284 யூனிட்களை விற்று ஒகினாவா ஆட்டோடெக் மூன்றாமிடத்திலும், இதை தொடர்ந்து 6,338 யூனிட் விற்பனையுடன் ஆம்பியர் (Ampere) நான்காவது இடத்திலும், 2,267 யூனிட் விற்பனையுடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐந்தமிடத்திலும் உள்ளன. மார்ச் மாதத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளராக நிறுவனம் மாறி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஓலா எலெக்ட்ரிக்கின் உயரதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஜனவரி 2022-ல் வெறும் 1,102 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Ola

அடுத்த செய்தி