உலகில் பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலையாக ஓலாவின் ஓசூர் தொழிற்சாலை இருக்கப்போகிறது.
ஓலா நிறுவனத்தால் ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலையில் 10,000 பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அந்நிறுவன தலைவர் பாவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
கார் புக்கிங் தொழிலில் கொடிகட்டிப்பறக்கும் ஓலா நிறுவனம் தற்போது வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. இதற்காகவே தமிழகத்தின் ஓசூர் அருகே 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தொழிற்சாலை ஒன்றை அந்நிறுவனம் கட்டமைத்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலையாக விளங்குகிறது. இத்தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தியை ஓலா நிறுவனம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ள ஓலா நிறுவனம், செப்டம்பர் 15ம் தேதி முதல் டெலிவரியை தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரிடையாக ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read:
டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓசூரில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான ஓசூரில் உள்ள ஓலா தொழிற்சாலை இனி உலகில் பெண்களால் இயக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலையாகவும் மாற இருப்பதாக தெரிவித்தார்.
ஆத்ம நிர்பார் பாரத்துக்கு ஆத்மநிர்பார் பெண்கள் தேவைப்படுகிறார்கள் என பாவிஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
ஓலாவின் தொழிற்சாலையில் 10,000 பெண்கள் பணியமர்தப்படுவார்கள் எனவும், இந்த தொழிற்சாலை முழுமையாக இயங்கும் போது 10,000 பெண்கள் இங்கு பணிபுரிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக பெண்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து பாவிஷ் அகர்வால் கூறுகையில், பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதால் அவர்களின் வாழ்க்கை மட்டும் பலமடைவதில்லை, அவர்களின் குடும்பங்களும், ஒட்டுமொத்த சமூகமும் உயரும் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.