இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஓலா தான். ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பலவிதமான திட்டங்களை வகுத்து வந்து உற்பத்தியை சமீபத்தில் தொடங்கின. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனத்துக்கான தேவையும், டிமாண்டும் அறிமுகம் ஆக இருப்பதை சாத்தியமாக பயன்படுத்திக் கொண்டு ஓலா நிறுவனம் விரைவாக செயல்பட்டு இரண்டு மாடல்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அதிகமாக விற்பனையாகும் டூவீலர் பிராண்டாக ஓலா நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 9634 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் விற்பனையான ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையில் இது 20% என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு வாகனம் விற்பனை செய்த நிலையில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டாக ஓலா நிறுவனம் முதலிடத்தை எட்டியுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் என்ற இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் விலையில் S1 ப்ரோ ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஓலாவின் ஸ்கூட்டர் அறிமுகம் ஆன உடனேயே வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளிலேயே 10,000 யூனிட்கள் விற்பனையானது. இந்த நிலையில் சந்தையில் S1 ப்ரோ எலெக்ட்ரிக் மாடல் மட்டுமே அதிகமாக விற்பனையாகிறது என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழல் மட்டும் அல்லாமல் இனி அடுத்த காலாண்டிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தான் சந்தையில் முன்னணியில் வகிக்கும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிய வண்ணம் இருந்தது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஓலா நிறுவனம் பல்வேறு வசதிகளை, ஓலா எலட்ரிக் வாடிக்கையாளர் மையங்களை அமைத்தது. அந்த வகையில், மேலும் 200க்கும் மேற்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் என்று கூறப்படும் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்ய உதவும் மையங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளது.
Also Read : ஈ - ஸ்கூட்டர்களை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை என்ன.? வீடியோ..
தற்போது வரை, 20 சென்டர்கள் உள்ளன. இந்த நிதியாண்டு முடிவதற்குள், அது 10 மடங்கு பெருகி, 200 சென்டர்கள் ஆவது ஆகும்! ஆன்லைனில் வாங்கவும், டெஸ்ட் ரைடு முன்பதிவு செய்து ஓட்டிப் பார்க்கவும், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மூலம் ஓலாவின் தயாரிப்புகள் கூடுதலாக நிறைய வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வாய்ப்பும் அதிகம் என்றும் ஓலா நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Ola, Scooters