• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நெதர்லாந்து தூதரகத்திற்காக 9 ஸ்பெஷல் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஓலா!

நெதர்லாந்து தூதரகத்திற்காக 9 ஸ்பெஷல் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஓலா!

 9 ஸ்பெஷல் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

9 ஸ்பெஷல் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது தயாராகி வரும் கஸ்டமைஸ்ட் ஸ்கூட்டர்கள் எங்கள் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு ஒரு சான்றாகும்.

  • Share this:
நெதர்லாந்து தூதரகம் அளித்துள்ள ஸ்பெஷல் ஆர்டரின் பேரில் 9 கஸ்டமைஸ்ட் Ola S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவிவித்துள்ளது. விரைவில் தயாராக உள்ள இந்த 9 கஸ்டமைஸ்ட் ஓலா ஸ்கூட்டர்களும் இந்தியாவில் அமைந்துள்ள நெதர்லாந்தின் 3 தூதரக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த கஸ்டமைஸ்ட் Ola S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஸ்பெஷல் 'Dutch Oranje' பெயிண்ட் தீம், நுட்பமான கிராபிக்ஸ் மற்றும் நெதர்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றுடன் வெளிவரும் என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கூறி இருக்கிறது. வரும் வாரங்களில் ஓலா கஸ்டமர்களுக்கான டெலிவரிகளை துவகையவுடன், இந்த 9 யூனிட்கள் டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கும், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள நெதர்லாந்து துணைத் தூதரகங்களுக்கும் டெலிவரி செய்யப்பட உள்ளன.

இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால், "நெதர்லாந்து நாட்டின் தூதரகத்திற்காக 9 கஸ்டமைஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் 2025-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் டூவீலர்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் எங்கள் மிஷன் எலக்ட்ரிக்கில் நெதர்லாந்து தூதரகமும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது தயாராகி வரும் கஸ்டமைஸ்ட் ஸ்கூட்டர்கள் எங்கள் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு ஒரு சான்றாகும். நெதர்லாந்து தூதரகத்தின் ஸ்பெஷல் ஆர்டர் குறுகிய காலத்திற்குள் கஸ்டமைஸ்ட் ஸ்கூட்டரை தடையின்றி உருவாக்க, சோதிக்க எண்கள் நிறுவனத்திற்கு பெரிதும் உதவி உள்ளது. இதனை அடுத்து எதிர்காலத்தில் எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ்ட் பெயிண்ட் ஃபினிஷ்களை வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

Also read... இளைஞர்களை ஈர்க்கும் யமஹாவின் Aerox 155 ஸ்கூட்டர் - இதை வாங்க சிறந்த காரணங்கள்!

அப்படி செய்தால் தங்களுக்கான ஸ்பெஷல் Ola S1 ஸ்கூட்டர் என்ற மகிழ்ச்சியுடன் வாங்குவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் பவிஷ் அகர்வால் கூறி இருக்கிறார். இதனிடையே நெதர்லாந்து தூதரகத்தின் தூதரான மார்டன் வான் டென் பெர்க் (Marten van den Berg) கூறுகையில், “கஸ்டமைஸ்ட் Ola S1 ப்ரோ ஸ்கூட்டர்களை வாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நெதர்லாந்து லோகோவுடன் டச்சு ஆரஞ்சே நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு அழகிய லுக்கில் உழவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எங்களுக்காக தயாராகி வருகின்றன. சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு இன்றியமையாத கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் முக்கிய பகுதியாக ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்த நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: