ஓலா (Ola ) எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, S1 மற்றும் S1 ப்ரோ என்று இரண்டு மாடல் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தி, முன்பதிவுகளையும் தொடங்கியது. அறிமுகமான 24 மணி நேரத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டன. ஸ்கூட்டர்கள் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்தது. இந்தியா முழுவதும் ஆன்லைனில் அட்வான்ஸ் புக்கிங் செய்தவர்களுக்கு நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடு தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.
சில காரணங்களால் டெஸ்ட் ரைடு தாமதமாகியது, இதனால் டெலிவரி தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், ஆயிரம் நகரங்களில் 10,000 S1 மற்றும் S1 ப்ரோ வாகனங்கள் டெஸ்ட் ரைடு வெற்றிகரமாக நிறைவேறியது.
இதுகுறித்து Ola எலக்ட்ரிக் நிறுவனத் தலைவரான பவிஷ் அகர்வால் “நாங்கள் 20,000 டெஸ்ட் ரைடுகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். எங்கள் குழுவினர் அற்புதமாக செயல்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முதலாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டெஸ்ட் ரைடுகளை ஒருங்கிணைத்து எங்கள் குழு சாதனை படைத்துள்ளது” என்று தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனையாக இருந்தாலும், தற்போது டெலிவரி எப்போது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
அகர்வாலின் டிவிட்டர் பதிவில் ஒரு யூசர் டெலிவரி எப்போது என்று கேள்வி கேட்டிருந்தார். “நவம்பர் 30 அன்று டெலிவரி வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். நாங்கள் நவம்பர் 11 அன்றே முழு பணத்தையும் செலுத்தி விட்டோம்... டெலிவரியை மீண்டும் தள்ளிப்போடாமல் இந்த மாதத்தின் இறுதியிலாவது எங்களுக்கு வாகனம் டெலிவரி கிடைக்குமா?” கேள்வி எழுப்பியிருந்தார். Ola எலக்ட்ரிக் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ஒரு டெலிவரி செய்வது பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, முன்பதிவு செய்தவர்களுக்கு டிசம்பர் மாதம் மத்தியில் தொடங்கி இறுதிக்குள் வாகனங்கள் டெலிவரி திட்டமிடப்பட்டுள்ளது.
S1 விலை ரூ. 97,703 மற்றும் S1 ப்ரோ ரூ. 1.27 லட்சம் என்று தற்போதைய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து, FAME மானியங்களுடனும் விலைகள் குறையலாம். அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 தேதிக்குள் முதல் பேட்ச் டெலிவரி செய்யப்படும் என்று முன்பதிவு செய்யத் தொடங்கிய போது நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், இப்போது ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதமாகி, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 30 தேதி வரை டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே, வாகனங்கள் டெலிவரி தேதி மாற்றம் மற்றும் தாமதம் குறித்து விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்துக்குள் முதல் பேட்ச் டெலிவரி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric Cars, Ola