உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிசக்தியை தேடும் பயணம் தீவிரமடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனவே தான் டாடா, மஹிந்திரா. ஓலா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்த படியாக ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் செல்லுடன் இயங்கும் மின்சார வாகனங்களின் விற்பனை மீதும் மக்களின் பார்வை பதிந்துள்ளது. மேலும் மத்திய அரசு ‘தேசிய ஹைட்ரஜன் இயக்கம்’ வாயிலாக பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தித் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
ஹைட்ரஜன் வாகனத் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் தொழில்துறையினர் எதிர்கால வாகனங்களை இயக்குவதற்கு பசுமையான மற்றும் தூய்மையான ஆற்றல் தீர்வுகளை தேடி வருகின்றனர். பல வாகன உற்பத்தியாளர்கள் வாகனங்களை இயக்குவதற்கான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் போது, Ola Electric CEO பவிஷ் அகர்வால் அந்த வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.
பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “கார்களுக்கு ஹைட்ரஜன் பொருந்தாது. ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு மிகவும் திறமையற்ற வழி என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்த பதிவில், “கார்களுக்கு ஹைட்ரஜன் பொருந்தாது. H2, H2 ஐ உற்பத்தி செய்ய மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, பின்னர் அழுத்தப்பட்ட வடிவத்தில் எரிபொருள் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கார்களில் நிரப்பப்படுகிறது, பின்னர் காரில் உள்ள எரிபொருள் கலங்களில் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. எனவே இது மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு மிகவும் திறமையற்ற வழி” என விமர்சித்துள்ளார்.
Hydrogen not relevant for cars. Electricity is used to produce H2, H2 then transported in pressurised form to fueling stations and filled in cars, and then converted in fuel cells in the car back to electricity. Very inefficient way of transporting electricity. https://t.co/mBqMoeP3ug
— Bhavish Aggarwal (@bhash) June 17, 2022
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்பது வாகனம் ஆற்றலைப் பெறக்கூடிய கார்பனை நடுநிலை ஆற்றலாக கொண்டதாக கருதப்படுகிறது. லித்தியம்-அயன் பேட்டரிகளும் சுற்றுச்சூழலுக்கு கார்பனை வெளியேற்றும் செயல்பாட்டுடன் உருவாக்கப்பட்டாலும், பசுமை ஹைட்ரஜன் சக்தி, அந்த சிக்கலில் இருந்து விடுபடுகிறது. அதை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் டெயில் பைப்பில் இருந்து தண்ணீரை மட்டுமே வெளியேற்றுகிறது.
Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!
அதே சமயம் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தேவைப்படும் விரிவாக்கம், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய தடையாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். மேலும், ஹைட்ரஜனின் பற்றாக்குறையும் கவலை அளிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.
Also Read : இந்த மூன்று மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளிவீசும் ரெனால்ட்
லித்தியம்-அயன் மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஹைட்ரஜன் ஆற்றலின் மற்றொரு நன்மை, குறைந்த எரிபொருள் நிரப்புதல் அல்லது ரீசார்ஜ் செய்யும் நேரம் குறைவு என்பதாகும். ஹைட்ரஜன் வாகனங்களில் பேட்டரி பேக்குகளின் அளவும் கணிசமாக சிறியதாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஹைட்ரஜன் எரிபொருள், செல், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற அரிய உலோகங்களைச் சேமிக்கிறது, அவை வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, மின்சார வாகனங்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு ஹைட்ரஜன் சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric Cars