ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பத்தே மாதங்களில் இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் சாதனை மைல்கல்லை எட்டிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.!!

பத்தே மாதங்களில் இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் சாதனை மைல்கல்லை எட்டிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.!!

ஓலா இ-ஸ்கூட்டர்

ஓலா இ-ஸ்கூட்டர்

நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக வாகனம் வாங்க விரும்பும் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India

நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக வாகனம் வாங்க விரும்பும் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவை தளமாக கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் புதிய மைல்கற்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் டூ வீலர் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், சமீபத்தில் இ-ஸ்கூட்டர் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நமது தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள அதன் ஃபியூச்சர்பேக்டரியில் (Futurefactory ) இருந்து சுமார் 1 லட்சம் ஸ்கூட்டரை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

நவம்பர் 2021-ன் பிற்பகுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை தொடங்கியது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், வெறும் 10 மாதங்களில் 1 லட்சம் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது. இந்த சாதனை பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், "எங்களது 10-வது மாத உற்பத்தியிலேயே 1 லட்சம் யூனிட்களை தாண்டி விட்டோம். இந்தியாவில் எந்த ஒரு புதிய வாகன நிறுவனமும் இதுவரை செல்லாத வேகத்தில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இந்த மைல்கல் ஒரு ஆரம்பம் தான். EV-க்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 1 லட்சம் யூனிட்களை 10 மாதங்களுக்கு குறைவான காலத்தில் உற்பத்தி செய்வோம் என்று நம்புகிறோம்" என கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் (அக்டோபர் 2022) ஓலா 20,000 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்றது. இந்தியாவில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களை பின்னுக்குத் தள்ளி மாதந்தோறும் சராசரியாக 60% வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் Ola Electric S1 இ-ஸ்கூட்டர் 1 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்ஸ்களை பெற்றது நினைவிருக்கலாம். இந்த புக்கிங் மைல்கல்லை அடைய 10 மாதங்கள் எடுத்து இருக்கிறது. சப்ளை செயின் சீர்குலைவுகளால் ஆட்டோ மொபைல் தொழில் பாதிக்கப்பட்டதால், உற்பத்தி தாமதம் மற்றும் காத்திருப்பு காலங்களை ஓலா நிறுவனமும் நீட்டித்தது.

Also Read : Ola-வின் S1 Pro, Ather-ன் 450 Plus, TVS-ன் iQube... இந்த மூன்றில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.?

இதனிடையே சில நாட்களுக்கு முன் ஓலா நிறுவனம் தனது மூன்றாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 Air-ஐ ரூ.84,999 விலையில் அறிமுகப்படுத்தியது. ஓலாவின் போர்ட்ஃபோலியோவில் மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டர், ஏப்ரல் 2023-ல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும், என்றும் இதற்கான ப்ரீ-புக்கிங்ஸ் 2023 பிப்ரவரியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதை பலமுறை சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் ஓலா அறிமுகப்படுத்த உள்ள எஸ்யூவி விவரங்கள் குறித்த தகவல்களை நிறுவனம் இதுவரை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. எனினும் ஓலாவின் எலெக்ட்ரிக் கார் வரும் 2024-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Electric bike, Ola, Scooters