ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

தீபாவளியை முன்னிட்டு புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ள ஓலா.!

தீபாவளியை முன்னிட்டு புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ள ஓலா.!

ஓலா எலெக்ட்ரிக்

ஓலா எலெக்ட்ரிக்

OLA Diwali Event 2022 | ஓலா எஸ்1 மாடலில் மாறுபட்ட வசதிகளுடன் மற்றொரு வேரியண்ட் ஸ்கூட்டரை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய மாடல் அல்லது வேரியண்ட் வாகனங்களை பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே ஓலா எஸ்1 என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருந்த நிலையில், அது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து, அதே மாடலில் மாறுபட்ட வசதிகளுடன் மற்றொரு வேரியண்ட் ஸ்கூட்டரை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை ரூ.80 ஆயிரத்தை ஒட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஓலா எஸ்1 மாடலை ரூ.99,999 என்ற விலையில் ஓலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களில் 125 சிசி திறன் கொண்ட டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் சுஸுகி ஆசஸ் போன்ற வாகங்களுக்கு போட்டி ஏற்படுத்தக் கூடியதாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஏறத்தாழ எஸ்1 ஸ்கூட்டரில் உள்ள அதே வசதிகளுடன், விலை குறைவான வேரியண்ட் ஒன்றை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலில் 3 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் வேரியண்டில் இந்த பேட்டரி திறன் மாறுபடும் எனத் தெரிகிறது.

அக்டோபர் 22ஆம் தேதி அறிமுகம் ஆகிறதா.?

அக்டோபர் 22ஆம் தேதி புதிய அறிவிப்பு ஒன்றை ஓலா நிறுவனம் வெளியிட உள்ளது என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முக்கியமான அறிவிப்பு எதுவென்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த புதிய வேரியண்ட் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Also Read : தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அள்ளி வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

டிவிட்டரில் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களது தீபாவளி நிகழ்வு அக்டோபர் 22ஆம் தேதி அமைய இருக்கிறது. ஓலா நிறுவனத்திடம் இருந்து மாபெரும் அறிவிப்பு வர இருக்கிறது, விரைவில் சந்திப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஓலா எஸ்1 அம்சங்கள்

ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் மோட்டார் உள்ளது. சிங்கிள் சார்ஜில் இது 141 கி.மீ. தொலைவுக்கு மைலேஜ் தரும். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த வாகனத்தில் பயணிக்கலாம். ஆனால், வேகம் அதிகரிப்பதற்கு ஏற்ப மைலேஜ் குறையும் என்று ஓலா நிறுவனம் குறிப்பிடுகின்றது.

Also Read : முக்கிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு மானியம் நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு!

அதாவது, வாடிக்கையாளர்கள் 3 விதமான வேகத்தில் ஓலா ஸ்கூட்டரை இயக்கலாம். நீங்கள் எகோ மோட் என்னும் மிதமான வேகத்தில் செல்லும்போது 128 கி.மீ. மைலேஜ் கிடைக்கும். கொஞ்சம் வேகமாக சென்றால் 101 கி.மீ. மைலேஜ் வரும். அதுவே ஸ்போர்ட் மோட் என்ற நிலையில் அதிவேகமாக செல்லும்பட்சத்தில் 90 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவிக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Ola, Scooters