ஓலா எலக்ட்ரிக், நிறுவனத்தின் கீழ் மற்றொரு புதிய வளர்ச்சி செயல்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ ஆன பவிஷ் அகர்வால், எலக்ட்ரிக் டாடா நெக்ஸான் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்கும் ஒரு ட்விட்டர் புகைப்படத்திற்கு பதில் அளித்துள்ளார்.
எப்போதுமே ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் அகர்வால், "அடுத்ததாக காருக்கு மாற்றாக ஓலா எலக்ட்ரிக் கார் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்ட ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார்.
ஓலா நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இன்னும் பல காலங்கள் ஆகலாம், அது நடக்க இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று நினைப்பவர்கள், மீண்டும் சற்று யோசியுங்கள். முன்னதாக ஒரு முறை, ஓலா எலக்ட்ரிக் நிறுவனமானது, வருகிற 2023 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யலாம் என்று கூறி இருந்தது.
மேலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுவதும் அதன் இவி (EV) வணிகத்தை பல பிரிவுகளின் கீழ் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஓலா எலக்ட்ரிக் கார் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் ஓலா நிறுவனம், ஓலா கார்ஸ் என்று அழைக்கப்படும் "பயன்படுத்தப்பட்ட" கார்களை விற்பனை செய்யும் சந்தையில் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
மேலும், சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமானது டெக்னே பிரைவேட் வென்ச்சர்ஸ், அல்பைன் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட், எடெல்வீஸ் மற்றும் பலவற்றிலிருந்து 200 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை திரட்டியதாகவும் அறிவித்தது. இந்த சமீபத்திய நடவடிக்கையின் கீழ் நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
Also Read : வாடிக்கையாளர்களை நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் டாப் 10 கார்கள்!
“நாங்கள் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் துறையையுமே மாற்றிவிட்டோம், இப்போது எங்களின் புதுமையான தயாரிப்புகளை பைக்குகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முதலீட்டாளர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தியாவிலிருந்து இவி புரட்சியை உலகிற்கு எடுத்துச் செல்ல அவர்களுடன் கூட்டு சேர ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஒரு அறிக்கையின் வழியாக தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஃபியூச்சர் என்கிற தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. அகர்வாலின் கூற்றுப்படி, ஃபியூச்சர் ஃபேக்டரி இப்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 யூனிட் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகிறது.
Also Read : கார் வாங்க முடியாது என தோற்றத்தை வைத்து அவமதித்த ஷோரூம் பிரதிநிதி - ஒரு மணிநேரத்தில் ரூ.10 லட்சத்துடன் வந்து விவசாயி பதிலடி!!
ஒரு ட்வீட்டில் அவர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது இன்றைக்கான உற்பத்தி மட்டுமே!" என்று தலைப்பும் இட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் "ஃபியூச்சர் ஃபேக்டரி இப்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கொள்முதல் பர்ச்சேஸ் விண்டோ திறக்கப்படும்," என்று எழுதி உள்ளார்.
நினைவூட்டும் வண்ணம், கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அனைத்து யூனிட்களையும் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்பேட்ச் செய்துவிட்டதாக தெரிவித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.