உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலைக்கான கட்டுமானத்தை ஓசூரில் தொடங்கியது ஓலா நிறுவனம்!

ஓலா நிறுவனம்

ஓசூரில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளது.

  • Share this:
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையின் கட்டுமானத்தை தொடங்கியது .

ஓலா நிறுவனம் ஓசூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 2,354 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறனுடைய உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலைக்கான கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் போது சுமார் 10,000 பேர் வேலைவாய்ப்பை பெறுவர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஓலா நிறுவனம் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழக அரசுடன் 2,354 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

ஓசூரில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளது.

ஓலா நிறுவனம்


கட்டுமான பணிகளை சாதனை நேரத்தில் முடிக்கும் வகையில் 10 மில்லியன் மனித வேலை மணி நேரம் என்ற திட்டத்துடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த தொழிற்சாலை வளாகத்தில் பசுமையை பேணும் விதமாக அதிக எண்ணிக்கை மரங்களை நடவும் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. முதல் கட்டப் பணிகள் ஒரு சில மாதங்களுக்குள் நிறைவடைந்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் முழுமையாக நிறைவடையும் போது இது வே உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை என்ற பெருமையை பெரும். ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் (20 லட்சம்) வாகனங்கள் தயாரிக்கும் திறன் பெற்றதாக இத்தொழிற்சாலை இருக்கும். இங்கு 10,000 பேர் வேலை வாய்ப்பை பெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஓசூர் தொழிற்சாலையானது மிக உயரிய தொழிற்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக சீமென்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு நடைபெறும் பணிகள் யாவும் கூடுமானவரை ஆட்டோமேடிக் நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் இதற்காக 5,000 ரோபாட்கள் நிறுவப்படும் எனவும் ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நெதர்லாந்தை சேர்ந்த Etergo scooters நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. ஓசூர் தொழிற்சாலையில் Etergo scooters நிறுவனம் உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை தயாரிக்க இருப்பதாகவும், இங்கு தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆசிய பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
Published by:Arun
First published: