ஒகினாவா நிறுவனம், தான் விற்பனை செய்த 3,215 மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று, சரி செய்து தர உள்ளதாக அறிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் ஒகினாவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றியதில் தந்தை மற்றும் மகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இரவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜரில் போட்டு தந்தை, மகள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், பேட்டரி வெடித்து தீப்பற்றியதாகவும் அதில் இருந்து வந்த புகையால் மூச்சுத்திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தீ விபத்து தொடர்பாக ஆய்வு நடத்திய ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் 3,215 ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்று சர்வீஸ் செய்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றிய விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய அச்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே வாடிக்கையாளர்களின் அச்சத்தை நீக்கும் வகையிலும், பாதுகாப்பு தொடர்பாக எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்யவும் ஒகினாவா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
also read : Simple Energy நிறுவனத்தின் 2-வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியீடு
இதன் படி தனது ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஹெல்த் செக் அப் முகாமை ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் நடத்த உள்ளது. 3,215 யூனிட் பிரைஸ் ப்ரோ ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்று, அதில் பேட்டரி தொடர்பாக ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என ஒகினாவா நிறுவனம் பரிசோதிக்க உள்ளது. அப்போது பேட்டரி அல்லது லூஸ் கனெக்டர்கள் போன்ற ஏதாவது பிரச்சனைகல் இருந்தால் இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் இலவசமாக அதனை சரி செய்து கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
It started out as random & sporadic but now cases of #ElectricVehicles on fire are surfacing with increasing frequency. Just as I had feared.
Last Saturday, 20 #electricscooters from #JitendraEV were gutted near Nashik in a trailer.
It'll get worse before it gets better.#EV pic.twitter.com/2G5ZFXqBfn
— Sumant Banerji (@sumantbanerji) April 11, 2022
இதைச் செயல்படுத்த, ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், தனது டீலர்களுடன் இணைந்து பிரத்யேகமாக நடத்த உள்ள இந்த பழுது நீக்கும் முகாமில் கட்டாயம் பங்கேற்கு படி ஒவ்வொரு ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களையும் தனித்தனியே தொடர்பு கொண்டு அறிவிக்க உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல், பிரச்சனை இருந்தால் சரி செய்து தருவதற்காக, தனது டீலர் பார்ட்னர்களுடன், ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தற்போது தொடர்பில் உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருவது என்ற கொள்கையின் அடிப்படையில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
also read : உலகின் மிகப்பெரிய கார் மார்க்கெட் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட இத்தாலி.. இந்தியாவுக்கு எந்த இடம்?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே மக்களுக்கு தீப்பிடித்து விடும் என்ற அச்சம் ஏற்படும் வகையில் சமீபகாலமாக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜிதேந்திரா நிறுவனம் போபாலில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீக்கிரையாகின. அதேபோல் புனேவில் உள்ள லோஹேகான் பகுதியில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபோன்ற சம்பவங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike