HOME»NEWS»AUTOMOBILE»odishas kotpad now has women trained to drive battery vehicles to collect waste from households vin ghta
பேட்டரி வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு பயிற்சி... ஒடிசாவில் புதுவித முயற்சி!
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் வல்லமை மிக்க நபர் என்றால் அது பெண் தான். உதாரணத்திற்கு நம் வீட்டில் இருக்கும் பெண்களே கூறலாம். அந்த வகையில் பெண்களை வீட்டு வேலைகளை மட்டும் செய்ய முடக்கி வைக்காமல் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்தால் அவர்களால், நம் சமூகமும் சிறப்புறும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் வல்லமை மிக்க நபர் என்றால் அது பெண் தான். உதாரணத்திற்கு நம் வீட்டில் இருக்கும் பெண்களே கூறலாம். அந்த வகையில் பெண்களை வீட்டு வேலைகளை மட்டும் செய்ய முடக்கி வைக்காமல் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்தால் அவர்களால், நம் சமூகமும் சிறப்புறும்.
'சுத்தம் சுகம் தரும்', 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம் நீர் வளம் காப்போம்', 'மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்', போன்ற பல வாசகங்களை அனுதினமும் நாம் கேள்விப்பட்டிருப்போம். நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க அரசு மட்டுமன்றி நமக்கும் அதில் முக்கிய பங்கு உண்டு. சுத்தம் பற்றிய விழிப்புணர்வுகள் பரவலாக காணப்பட்டாலும் தனிமனித மாற்றம் ஏற்படவில்லை என்றால் சுத்தம் என்பது நிச்சயமற்றதாகிவிடும்.
அந்த வகையில் ஒடிசாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முயற்சி குறித்து இங்கு காண்போம். ஒடிசாவின் கோட்பேட் என்ஏசி, (Odisha's Kotpad NAC) வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புடன் பின்னிப் பிணைந்த பெண்கள் சமூகத்தில் அதிகாரம் பெறுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை இப்போது அமைத்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள 4,500 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களை இயக்க சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த நான்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
அதில் "பெண்களை சமூகத்தில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் ஒரு தனித்துவமான முயற்சியில், ஒடிசா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 பெண்களை ஈடுபடுத்தி, பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, 4,560 வீடுகளில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரித்து, அந்த பகுதியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் நகர்ப்புற அமைச்சகம் வைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் எல்லையில் அமைந்துள்ள கோராபுட் மாவட்டத்தில் கோட்பாட் நகரம் உள்ளது. மறுமுனையில் சத்தீஸ்கருக்கு அருகிலுள்ள டவுன்ஷிப் ஜகதல்பூர் ஆகும், இது வழக்கமான வணிக இணைப்பைக் கொண்டுள்ளது. பெண்களுக்கு வேலை வழங்கும், அதே நேரத்தில் தூய்மையான நகரத்தை கட்டமைக்கவும் அதற்கு பெண்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவர்களை சேவைக்கு அமர்த்துவதற்குமான இந்த முன்முயற்சி பலரால் பாராட்டப்படுகிறது.
ஊரடங்கின் போது வேலைவாய்ப்பு நிலைமை நாட்டின் பிற பகுதிகளைப் போலவே ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்திலும் மோசமடைந்தது. பிசினஸ் ஸ்டாண்டர்டின் (Business Standard) ஒரு அறிக்கையின்படி, ஒடிசாவின் பல மாவட்டங்களில் மார்ச் மாதத்தில் அறிவித்த ஊரடங்கால் பல கூலித் தொழிலாளர்கள் இடப்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் பலர் இந்த நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இல்லை, ஆனால் சூழ்நிலை காரணமாக இடப்பெயர்வு மாநிலத்தில் பரவலாக காணப்பட்டது.
முறைசாரா மதிப்பீடுகளின்படி, மாநிலத்தில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அதே நேரத்தில் பல கூலித் தொழிலாளர்கள் இடப்பெயர்ந்தால் வேளாண்மை சார்ந்த முக்கிய பணிகள், ஊரடங்கால் முடங்கிப்போயின. இது ஒடிசாவின் வாழ்வாதாரத்தையே பாதித்தது.
எங்கு ஒரு பெண் போற்றப்படுகிறாளோ, அந்த குடும்பம் வளரும், அந்தக் குடும்பத்தால் சமூகம் வளரும் என்ற சொற்றொடர் உண்மையானது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் வல்லமை மிக்க நபர் என்றால் அது பெண் தான். உதாரணத்திற்கு நம் வீட்டில் இருக்கும் பெண்களே கூறலாம். அந்த வகையில் பெண்களை வீட்டு வேலைகளை மட்டும் செய்ய முடக்கி வைக்காமல் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்தால் அவர்களால், நம் சமூகமும் சிறப்புறும். மேலும் இது பெண்கள் அவர்களுக்கான முன்னேற்ற பாதையில் செல்ல சிறந்த உந்துகோலாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டாகும்.