காசு மாசுபாட்டைக் குறைக்க எலெக்ட்ரிக் பேருந்துகளைக் களமிறக்கிய ஒடிசா அரசாங்கம்!

இதுதொடர்பான ஒப்புதல் கையெழுத்தும் விரைவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 22, 2019, 2:39 PM IST
காசு மாசுபாட்டைக் குறைக்க எலெக்ட்ரிக் பேருந்துகளைக் களமிறக்கிய ஒடிசா அரசாங்கம்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 22, 2019, 2:39 PM IST
நகர்ப்புறங்களில் காற்று மாசுபாடால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடை சரிசெய்ய எலெக்ட்ரிக் பேருந்துகளைப் பயன்பாட்டுக்கு வெளியிடுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக ஒடிசாவில் கோயில் நகரம் என்றழைக்கப்படும் பூரி மற்றும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படக்கூடிய புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் பொதுப் போக்குவரத்துக்காக எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து அம்மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷோக் சந்திர பாண்டா கூறுகையில், “வழக்கமான போக்குவரத்து முறைகளிலிருந்து மாறுபட்டு புதிய நடைமுறைகளைப் பின்பற்ற உள்ளோம். புவனேஷவர், கட்டாக் மற்றும் பூரி ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள 100 கி.மீ ரேடியஸ் அளவுக்கு முதற்கட்டமாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கும்” எனத் தெரிவித்தார்.


மேலும், இதுதொடர்பான ஒப்புதல் கையெழுத்தும் விரைவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவே டெஸ்ட் ட்ரைவ்-ல் தென்பட்ட மஹிந்திரா தார் 2020..!
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...