காற்று மாசுபாட்டைக் குறைக்க வேறு வழியில்லை- மீண்டும் அமலுக்கு வரும் Odd-Even திட்டம்

காற்று மாசுபாடால் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கும் நடைமுறையும் அடிக்கடி நடந்து வருகிறது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க வேறு வழியில்லை- மீண்டும் அமலுக்கு வரும் Odd-Even திட்டம்
ஆட்- ஈவன் திட்டம்
  • News18
  • Last Updated: September 14, 2019, 8:52 AM IST
  • Share this:
காற்று மாசுபாடு டெல்லியில் அதிகரித்துக் காணப்படுவதால் Odd-Even என்னும் கார்களுக்கான கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமலுக்கு வர உள்ளது.

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதைக் கட்டுப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலாக Odd-Even என்னும் கார்களுக்கான கட்டுப்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நம்பர் ப்ளேட்டில் ஒற்றைப்படை எண்கள் இருக்கும் கார்கள் ஒற்றை இலக்கத் தேதி கொண்ட நாட்களிலும் இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதி நாட்களில் மட்டுமே சாலையில் பயணிக்க முடியும்.
இச்சட்டத்தைத் தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. டெல்லி மாசுபாடுக்கு அண்டை மாநிலங்களின் தாக்கமும் இருக்கிறதாம். அதிக வெயிலின் காரணமாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விளைச்சல் பயிர்கள் எல்லாம் தீப்பிடித்து எரிவதாலும் காற்று மாசுபாடு அடைவதாகவும் கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் டெல்லியில் 3.1 மில்லியன் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,000 என்ற விகிதத்தில் உயருகிறதாம். உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஆய்வில் உலகின் அதிகம் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி டாப் இடத்தில் உள்ளது. காற்று மாசுபாடால் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கும் நடைமுறையும் அடிக்கடி நடந்து வருகிறது.

மேலும் பார்க்க: ’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு..!புதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன?
First published: September 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading