உலகமே வரவர ஒரு குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. நிலம் தாண்டி கடல், கடலுக்கு அடியில் தங்கும் கழிவுகள் துருவப்பகுதிகளில் பனியோடு உறைந்து விடுகிறது. இந்த கழிவுகளை எப்படி முழுமையாக நீக்க முடியும் என்று யோசித்தால் அதற்கு வழிகளே இல்லை போல் தோன்றுகிறது. இதற்கு பத்தாமல் விண்வெளியில் மனிதன் சேர்த்துக்கொண்டிருக்கும் குப்பைகள் வேறு விண்வெளியையும் மாசுபடுத்திக்கொண்டு இருக்கிறது.
ஆபத்தான மாசுகளில் ஒன்று எலக்ட்ரிக் பேட்டரிகள். அதை மறுசுழற்சி செய்வது என்பது சாத்தியப்படாது. அதன் திறனை முழுமையாக கடைசி வரை பயன்படுத்த முயல்வதே இப்போதைக்கு பேட்டரிகள் எண்ணிக்கையை குறைப்பதற்கான, அதன் கழிவுகளைக் குறைப்பதற்கான வழி.
எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகள் காலப்போக்கில் படிப்படியாக பலவீனமடைகின்றன, மேலும் அவை அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவில் மாற்றப்பட வேண்டும். அத்தகைய பேட்டரிகளின் சில பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால் ஒரு சில அபாயகரமானவை. சுற்றுச்சூழலில் அதிகம் மாசுபடுத்தும் தன்மை கொண்டதாக உள்ளன.
இப்போது, பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் இந்த பழைய பேட்டரிகளை நல்ல பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஜெர்மன்-இந்திய கூட்டு ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘நுனம்’ இந்த பேட்டரிகளை மின்சார ரிக்ஷாக்களை இயக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆடி சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிதியளிக்கிறது.
ஆரம்பத்தில், பிரபலமான கார் தயாரிக்கும் நிறுவனமான ஆடியின் E-Tron பேட்டரிகளை ரிக்ஷாக்களுக்கு சக்தியூட்டுவதற்குப் பயன்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. E-Tron ஆன்-ரோடு விலை ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளது மற்றும் 400 கிமீக்கு மேல் செல்லும் திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. ‘நுனம்’ இந்த பேட்டரியைப் பயன்படுத்தி சோதனை ஓட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
2.5 டன் எடை கொண்ட சொகுசு ஆடி வாகனத்திற்கு பழைய பேட்டரி தேவையில்லை என்றாலும், எளிமையான, மக்கள் செல்லும் ரிக்ஷாவுக்கு இது போதுமானது. வலுவான செயல்திறனை வழங்கும். ரிக்ஷாக்கள் குறைவான தூரத்திற்கு குறைவான வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டதால் பழைய பேட்டரிகள் இதற்கு கச்சிதமாக பொருந்திவிடும். அப்படித்தான் ஜெர்மன் சொகுசு கார்களின் பேட்டரிகள் இந்திய ரிக்ஷாக்களில் மறு பயன்பாட்டிற்கு உள்நுழைந்தன.
இத்தகைய மறு சுழற்சி பேட்டரிகள் பயன்பாடு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது பலருக்கு நிதி ரீதியாக தன்னம்பிக்கை மற்றும் வேலைவாய்ப்பைப் பெற உதவும். அதுவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் இருக்கும் என்று ‘நுனம்’ இணை நிறுவனர் ப்ரோடிப் சாட்டர்ஜி கூறினார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமாக தன்னைப் பதிவு செய்து கொண்ட நுனம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனது ஆட்டோக்களை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. பெண் தொழில்முனைவோருக்கு ரிக்ஷாக்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அதோடு சார்ஜிங் உமிழ்வு இல்லாதது மற்றும் பகல் நேரத்தில் சூரிய சக்தியிலிருந்து ஆற்றலைச் சேமிக்க வல்லதாக மாற்ற சோலார் பேனல் சார்ஜிங் அமைப்பைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது. நுனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் அடிப்படையில், ஓட்டுநர் இருக்கைக்கு கீழே பேட்டரியை நிறுவ திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது.
Published by:Ilakkiya GP
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.