போக்குவரத்து விதிமீறலா?- செப்டம்பர் 1-ம் தேதி முதல் கடுமையாகும் சட்டம்!

மது போதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 30, 2019, 8:36 PM IST
போக்குவரத்து விதிமீறலா?- செப்டம்பர் 1-ம் தேதி முதல் கடுமையாகும் சட்டம்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 30, 2019, 8:36 PM IST
போக்குவரத்து விதிமீறல்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019, வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சாலை விதிமுறை மீறல்களுக்கான அபராதங்களும் தண்டனைகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் அடிப்படையில், அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், அதிவேகப் பயணங்களுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதாம், லைசென்ஸ் இல்லையென்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று அபராதத் தொகை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே மசோதாவில் வாகனப் பயிற்சிக்கான முறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தின் போது உதவுபவர்களுக்கு சாதகமாகவும் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

சாலைவிதிகளை மீறினால் 100 ரூபாய் அபராதம் என்பது 500 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி பயணித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட லைசென்ஸ் பயன்படுத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், மது போதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் இனி எலெக்ட்ரிக் சார்ஜிங் வசதி - மத்திய அரசு ஒப்பந்தம்

Loading...

மேலும் பார்க்க: 90 வயதிலும் ஓயாமல் உழைக்கும் வில்லேஜ் விஞ்ஞானி
First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...